தென்கொரியா முன்னாள் ஜனாதிபதிக்கு 30 ஆண்டுகள் சிறை!
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி Yoon Suk Yeol இற்கு 30 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி Yoon Suk Yeol
கடந்த 2024-ஆம் ஆண்டு ராணுவச் சட்டத்தைப் பிறப்பிப்பதற்காக, வேண்டுமென்றே வட கொரியா மீது ட்ரோன்களை ஏவிச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் எதிரிக்கு உதவியது போன்ற குற்றங்களுக்காக அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
முன்னதாக, உள்நாட்டுப் புரட்சிக்குத் தலைமை தாங்கியதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், தற்போது இந்த புதிய தீர்ப்பு வெளிவந்துள்ளது.
இந்த அரசியல் குழப்பங்களால் அவர் ஏற்கனவே பதவியில் இருந்து நீக்கப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள யூன், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.




