செய்தி விளையாட்டு

தென்கொரியாவின் கனவு வெற்றி நனவானது!

  • June 12, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தொடரில் தென் கொரியா மற்றும் செக் குடியரசு அணிகள் மோதிய விறுவிறுப்பான போட்டியில் தென்கொரியா அணி வெற்றிபெற்றுள்ளது. ஆட்டத்தின் பெரும்பகுதியை தென் கொரியா கட்டுப்படுத்தினாலும், செக் குடியரசு அணி முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது. எனினும், ஹ்வாங் இன்-பியோமின் சிறப்பான ஆட்டத்தால் தென் கொரியா விரைவாகப் பதிலடி கொடுத்து சமநிலையை எட்டியது. இறுதியில் மாற்று வீரராக வந்த ஓ ஹியோன்-க்யு ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்து தனது […]

ஐரோப்பா

50 இராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் : ரஷ்யாவை நடுங்கவைக்கும் உக்ரைன்!

  • June 12, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் 50 இராணுவ வாகனங்களை அழித்து அதனை மீண்டும் பயன்படுத்த முடியாததாக மாற்றியுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது. கிரிமியாவை உக்ரைன் பெருநிலப்பரப்புடன் இணைக்கும் முக்கிய பாதையான அர்மியான்ஸ்க் (Armiansk) பாலத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ட்ரோன் தாக்குதல் மூலம் ரஷ்யாவின் அணுகலை முழுமையாகத் துண்டிக்கும் திறன் உக்ரைனுக்கு உள்ளது என்று  உக்ரேனிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்கள் ஏற்கனவே முக்கிய விநியோகப் பாதைகளில் போக்குவரத்தை கணிசமாகக் குறைத்துள்ளன. இதற்கிடையே கிழக்கு டொனெட்ஸ்க் மற்றும் கார்கிவ் பகுதிகளில் […]

ஐரோப்பா

டான் ஜார்விஸ் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமனம்!

  • June 12, 2026
  • 0 Comments

இராணுவ நிதி ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையில் ஜான் ஹீலி பதவி விலகியதைத் தொடர்ந்து டான் ஜார்விஸ் (Dan Jarvis ) பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் பிரதமர் ஸ்டாமர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், பிரிட்டிஷ் மக்களைப் பாதுகாப்பதே எனது முதன்மையான கடமையாகும், மேலும் நமது தேசியப் பாதுகாப்பைப் பாதுகாக்கத் தேவையான அனைத்தையும் நான் எப்போதும் செய்வேன் என்று கூறியுள்ளார். நமது நாடு எதிர்கொள்ளும் பெருகிவரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இவ்வேளையில், டான் ஜார்விஸை பாதுகாப்புச் செயலாளராக நியமிப்பதில் நான் […]

செய்தி விளையாட்டு

இறுதி ஓவர்வரை பரபரப்பு: வீழ்ந்தது இலங்கை!

  • June 12, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது T-20 போட்டியில், கடைசி ஓவரில் Rovman Powell அடித்த சிக்ஸர் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி தரப்பில் கமிந்து மெண்டிஸ் அதிகபட்சமாக 51 ஓட்டங்ளையும் குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும் சேர்த்தனர் . மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் […]

அரசியல் இலங்கை செய்தி

சுரேஷ் சலேவின் உண்ணாவிரத நாடகம்!

  • June 12, 2026
  • 0 Comments

“நீங்கள் குற்றமற்றவர் எனில் நீதிமன்றம் ஊடாக அதனை நிரூபித்துக்காட்டுங்கள். மாறாக உண்ணாவிதரப் போராட்டத்தில் ஈடுபட்டு பயன் இல்லை.” என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சுரேஷ் சலேவிடம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கூறியவை வருமாறு, “ சஹ்ரான் குழுவினருக்கு எவரேனும் உதவி இருந்தால் அவர்களுக்கு எதிராகவும் நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும். […]

இலங்கை

நடுவானில் மின்னல் தாக்கம் : அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

  • June 12, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு புறப்பட்ட விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மின்னல் தாக்கியதன் காரணமாக விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தின் என்ஜின்களில் ஒன்றான UL 606 மீது மின்னல் தாக்கியதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், பயணிகள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்குச் செல்லும் மற்றொரு விமானத்திற்கு மாற்றப்பட்டனர். இதனால் 5 மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது. […]

செய்தி விளையாட்டு

சிங்கப் பெண்களுக்கான களம்: சமர் இன்று ஆரம்பம்!

  • June 12, 2026
  • 0 Comments

ICC மகளிர் உலகக்கிண்ண T – 20 தொடர் இன்று இங்கிலாந்தில் கோலாகலமாக ஆரம்பமாகின்றது. முதல் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு இப்போட்டி பெர்மிங்காமில் உள்ள எக்பாஸ்டன் மைதானத்தில் ஆரம்பமாகும். மகளிர் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகின்றது. இதுவரை 9 முறை நடந்துள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 6 முறை ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடைசியாக […]

உலகம் செய்தி

இறங்க மறுக்கும் ஈரான்! நடக்கப்போவது என்ன?

  • June 12, 2026
  • 0 Comments

ஈரான் தனது நாட்டின் மீதான தாக்குதல்களைத் தடுக்க பாதுகாப்பு உத்தரவாதத்தையும், நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்க பொருளாதாரத் தடைகளை நீக்குவதையும் முதன்மையாகக் கோரியுள்ளது எனத் தெரியவருகின்றது. எனினும், இஸ்ரேலின் நிலைப்பாட்டை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடியாது என்பதால் இத்தகைய பாதுகாப்பு உறுதிமொழிகளை வழங்குவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. குறிப்பாக, அமெரிக்க-இஸ்ரேல் மோதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஈரான், உடனடி நிதி நிவாரணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறது. பாதுகாப்பு உத்தரவாதம், தடை நீக்கம் உள்ளிட்டவை ஏற்கப்படாவிடின், எந்தவொரு சமரசத்தையும் ஈரான் ஏற்காது என்பது உறுதி. இது […]

செய்தி விளையாட்டு

முதல் ஆட்டத்திலேயே 3 சிவப்பு அட்டைகள்!

  • June 12, 2026
  • 0 Comments

மெக்சிகோ சிட்டியின் அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில், மெக்சிகோ அணி தென்னாப்பிரிக்காவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. மெக்சிகோ அணி தனது உலகக் கோப்பை வரலாற்றுத் தொடக்க ஆட்டங்களில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். ஜூலியன் குயினோன்ஸ் மற்றும் ரவுல் ஜிமெனெஸ் ஆகியோர் கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர். இந்த ஆட்டத்தில் இரு அணிகளையும் சேர்த்து மொத்தம் மூன்று சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது. […]

இலங்கை செய்தி

தமிழர் தாயகத்தில் காணி ஆக்கிரமிப்பு: ஐரோப்பாவில் முறைப்பாடு!

  • June 12, 2026
  • 0 Comments

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் காணி ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரியிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சாணக்கியன் நேரில் முறையிட்டுள்ளார். ஐரோப்பிய வெளிநாட்டு நடவடிக்கை சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவரான சார்ல்ஸ் வைட்லியை, பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் சொல்லிசைப் பாடகரான கணேஷ்குமார் சங்கீத்ஷன் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து […]