ஐரோப்பா

எல்லைகளை வலுப்படுத்துவது தொடர்பில் அவசரக்கூட்டம் : கட்டுப்பாடுகளை கடினமாக்க அழைப்பு

ஸ்பெயினின் செவுட்டா பகுதிக்குள் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பிரவேசித்ததை தொடர்ந்து எல்லைப் பகுதிகளை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) எல்லைப் பாதுகாப்பில் “ஒன்றிணைந்த நடவடிக்கை” எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

ஸ்பெயினுக்குள் ஊடுருவிய சுமார் 69500 புலம்பெயர்ந்தோர் தற்போது மொரோக்கோவிற்கு திரும்பிவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் ஸ்பெயின் பக்கத்தில் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை 72 ஆகவும், மொராக்கோ பக்கத்தில் 11 ஆகவும் உள்ளன.

இந்நிலையில் இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர்கள் இன்று காணொளி ஊடாக அவசரக் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளனர்.

செட்டாவில் நடந்த நிகழ்வுகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளில் சிலவற்றுக்கு இடையேயான உறவுகளைச் சீர்குலைத்துள்ளன.

இதனைத் தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸுக்கு கடிதம் எழுதிய வான் டெர் லேயன், பிரதமரின் துரித நடவடிக்கைகளை பாராட்டியதுடன், இந்தச் சம்பவத்திலிருந்து, முக்கியமான இடங்களில் நமது எல்லைகளை மேலும் வலுப்படுத்த நாம் இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது.” என்றுக் கூறினார்.

அத்துடன் நமது அனைத்து வெளி எல்லைகளையும் பாதுகாப்பது ஒரு பகிரப்பட்ட ஐரோப்பியப் பொறுப்பாகும்” என்று எச்சரித்ததோடு, “கவனமான கண்காணிப்பு மற்றும் தேவைப்படும் இடங்களில் பௌதீகத் தடைகளைப் பயன்படுத்த வேண்டும்” என்றும் அழைப்பு விடுத்தார்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்