இலங்கை

கொழும்பின்  புறநகர்ப் பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு

  • June 24, 2026
  • 0 Comments

கொழும்பின்  புறநகர்ப் பகுதிகளில் இன்று (24)  24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய வடிகால் அமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  இரவு 8.00 மணி முதல் நாளை (25) இரவு 8.00 மணி வரை 24 மணி நேர நீர் விநியோகத் தடை விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பதுக்கா, ஹோமகம, கொட்டாவ, பன்னிப்பிட்டிய மற்றும் பெலன்வத்த ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு ஏற்படும் என்றும், மகாரகம பகுதிக்கு குறைந்த அழுத்த நிலையில் நீர் விநியோகம் செய்யப்படும் […]

IAEA Director-General Rafael Grossi செய்தி

ஈரானில் விரைவில் ஆய்வு: சர்வதேச அணுசக்தி அமைப்பு நம்பிக்கை

  • June 24, 2026
  • 0 Comments

ஈரானின் அணுசக்தி மையங்களை, சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆய்வாளர்கள் விரைவில் பார்வையிடுவார்கள் என்று அதன் தலைவர் Rafael Grossi நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த ஆய்வுகள் நடைபெறுவது உறுதி என்றாலும், அதற்கான துல்லியமான காலக்கெடு இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஆய்வாளர்களை மீண்டும் அழைப்பதற்கு ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா தரப்பில் கூறப்படுவதை அந்த நாடு மறுத்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சு, அணுசக்தி முகமையுடன் தற்போதைக்கு எந்த சந்திப்போ அல்லது ஆய்வு திட்டங்களோ இல்லை என்று […]

ஈரான், ஓமான், அமெரிக்கா , பிராந்தியத்தின் பிற கடலோர நாடுகள் மற்றும் கடல்சார் துறையினரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐ.நா. சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) பொதுச்செயலாளர் Arsenio Dominguez தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

வளைகுடா பகுதியில் சிக்கியுள்ள 11,000 மாலுமிகளை மீட்க ஐ.நா. திட்டம் வகுப்பு

  • June 24, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போரினால் வளைகுடா பகுதியில் சிக்கியுள்ள 11,000-க்கும் மேற்பட்ட மாலுமிகளை மீட்பதற்கான பாரிய திட்டத்தை ஐ.நா அறிவித்துள்ளது. ஈரான், ஓமான், அமெரிக்கா , பிராந்தியத்தின் பிற கடலோர நாடுகள் மற்றும் கடல்சார் துறையினரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐ.நா. சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) பொதுச்செயலாளர் Arsenio Dominguez தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஈரானுக்கிடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர கடந்த வாரம் தற்காலிக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் […]

இந்தியா

லக்னோ தீவிபத்து – நால்வர் கைது, 6 பேர் மீது வழக்கு பதிவு

  • June 24, 2026
  • 0 Comments

இந்தியா – லக்னோவில் உள்ள மூன்று மாடிக் கட்டிடத்தில்  ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ள விவகாரம் தொடர்பில் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிக மக்கள் அடர்த்தி கொண்ட அலிகஞ்ச் பகுதியில், செல்லப்பிராணிகள் கடை மற்றும் அனிமேஷன் 3டி கேமிங் மையம் இயங்கி வந்த கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்த நிலையில், 07 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, இதுகுறித்து […]

தர்மன் படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தி பொழுதுபோக்கு

ரஜினியின் 173வது படத்தின் பெயர் அறிவிப்பு

  • June 24, 2026
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு சங்கமித்துள்ளமை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். தர்மன் படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் தோற்றத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியை அதிகரிக்க தீர்மானம்

  • June 24, 2026
  • 0 Comments

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஹைப்ரிட் கார்கள் மீதான  வரிகளை அதிகரிக்க ஐரோப்பிய ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவைச் சார்ந்திருக்கும் அதிக மதிப்புள்ள பொருட்களின் இறக்குமதியைக் குறைப்பதே இந்த வரி விதிப்பிற்கான நோக்கமாகும். இதற்கமைய உறுப்பு நாடுகளிடமிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த வரியை விதிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் தயார் செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது. சீனாவுடனான தற்போதைய வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், அரிய கனிமங்கள் உள்ளிட்ட பிற அத்தியாவசியப் பொருட்களுக்காக உலகின் இரண்டாவது பெரிய […]

பிரான்ஸ் முழுவதும் உள்ள 30 வானிலை நிலையங்களின் சராசரி வெப்பநிலையைக் கணக்கிடும் தேசிய வெப்பக் குறியீடு 29.8 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகியுள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

வாட்டி வதைக்கிறது வெப்ப அலை – பிரான்சில் நிலைமை மோசம்

  • June 24, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளை வெப்ப அலை (Heat wave) தாக்கி வரும் நிலையில், செவ்வாய்க்கிழமையன்று பிரான்ஸ் தனது வரலாற்றிலேயே மிக வெப்பமான நாளைப் பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் மற்றும் லூவ்ரே (Louvre) அருங்காட்சியகம் ஆகியவற்றின் பார்வையாளர் நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதோடு, பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்தக் கடுமையான வெப்பநிலை பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளதை அடுத்து, அங்குள்ள வானிலை ஆய்வு மையங்கள், பிரான்ஸைப் போலவே கோடிக்கணக்கான மக்களின் பாதுகாப்பைக் கருதி ‘சிவப்பு எச்சரிக்கை’ […]

இந்தத் தீர்மானத்தை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், இது தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட மற்றும் அர்த்தமற்ற ஒன்று என்று சாடியுள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ட்ரம்புக்கு கடிவாளம்: நாடாளுமன்ற ஒப்புதலின்றி போரை நடத்த முடியாது

  • June 24, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான போரை தொடர்வதற்கு முன்பாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அறிவுறுத்தும் தீர்மானத்திற்கு, குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் 50-48 என்ற கணக்கில் இத்தீர்மானம் நிறைவேறியது. இதில் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து சில குடியரசுக் கட்சி செனட்டர்களும் ஆதரவாக வாக்களித்தனர். இதேபோன்றதொரு தீர்மானம் இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையிலும் (House of Representatives) நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்மானம் […]

சுரேஷ் சலே என்பவர் பயங்கரவாதி அல்ல. பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய புலனாய்வுப் பிரிவுக்குத் தலைமை வகித்த ஓர் அதிகாரி ஆவார். எனவே, அவரை ஒரு பயங்கரவாதியைப் போல நடத்தக்கூடாது. அரசியல் இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

சுரேஷ் சலேவின் தகவல்கள் ‘புலி டயஸ்போராக்களிடம்’ சிக்கலாம்: பதறுகிறது மஹிந்த அணி

  • June 24, 2026
  • 0 Comments

“சுரேஷ் சலேவிடம் உள்ள உளவுத் தகவல்களை, ஏதேனும் ஒரு விசாரணை அதிகாரி பணத்திற்காகப் புலி டயஸ்போராக்களுக்கு விற்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லாமல் இல்லை. எனவே, தேசிய பாதுகாப்பைச் சுரேஷ் சலே காட்டிக்கொடுக்காமல் இருப்பது பெருமையளிக்கின்றது” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு: “மிலேனியம் சிட்டி (Millennium City) சம்பவம் நினைவிருக்கலாம் அல்லவா? அதுதொடர்பான தகவல்கள் வெளியான […]

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் (Harry Kane) அல்லது பிற வீரர்கள் ஆபத்தான பகுதிக்குள் நுழையும் போதெல்லாம், கானா வீரர்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டு தடுத்தனர். செய்தி விளையாட்டு

கானாவின் இரும்புக்கோட்டை தடுப்பாட்டம் – இங்கிலாந்துக்கு ஏமாற்றம்

  • June 24, 2026
  • 0 Comments

உலகக் கோப்பையின் Group L பிரிவின் இரண்டாவது லீக் போட்டியில், இங்கிலாந்து அணி கானாவின் பலத்த தடுப்பாட்டத்தை உடைக்க முடியாமல் திணறியது. இதனால் நேற்று நடைபெற்ற இப்போட்டி 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த முடிவு இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ள போதிலும், தங்களது முதல் போட்டியில் குரோஷியாவை 4-2 என வீழ்த்தியிருந்த இங்கிலாந்து அணிக்கு இது பெரும் ஏமாற்றமாகவே அமைந்தது. தங்களது முதல் போட்டியில் பனாமாவுக்கு எதிராகக் கடைசி நிமிடத்தில் […]