இலங்கை செய்தி

நாவற்பழம் விற்ற 10 வயது சிறுவன் மோட்டார் சைக்கிள் மோதி பலி: கிளிநொச்சியில் சோகம்

கிளிநொச்சி - பரந்தன் பூநகரி பிரதான வீதியில், குடமுருட்டி பகுதியில் நாவற்பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி – பரந்தன் பூநகரி பிரதான வீதியில், குடமுருட்டி பகுதியில் நாவற்பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி, உருத்திரபுரம் – எள்ளுக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய நிரோசன் லக்சன் என்ற சிறுவனே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நாவற்பழ வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த மேற்படி சிறுவன், இநேற்று வியாழக்கிழமை பரந்தன் – பூநகரி பிரதான வீதியைக் கடக்க முற்பட்டவேளை, பூநகரியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை