ஐரோப்பா

பெலாரஸில் 15 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தூதருடன் கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ Alexander Lukashenko 15 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

பெலாரஸ் மீது அமெரிக்கா விதித்த சில தடைகளை நீக்குவதற்கு பிரதியீடாக கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக மன்னிப்பு அளிக்கப்பட்ட 15 பேரில் 10 பெண்கள் அடங்குவதாகவும், அவர்களில் 13 பேர் “தீவிரவாதத் தன்மை கொண்ட குற்றங்களை” செய்தவர்கள் என்றும் லுகாஷென்கோவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் கருணை கோரியதாலும், தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததாலும் இந்த மன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை தீவிரவாதச் செயல்பாடு, வெறுப்புணர்வைத் தூண்டுதல் அல்லது அதிபரை அவமதித்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனை பெற்ற 883 அரசியல் கைதிகள் பெலாரஸில் இன்னும் இருப்பதாகத் தடைசெய்யப்பட்ட மனித உரிமை அமைப்பான ‘வியாஸ்னா’ (Viasna) கூறுகிறது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்