அரசியல் இலங்கை செய்தி

22மீது இன்று வாக்கெடுப்பு: ஆளுங்கட்சிக்குள் பிளவு ஏற்படுமா?

“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஆளுங்கட்சி ஒருமித்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றது. வாக்கெடுப்பு முடிவு மூலம் இது உறுதியாகும்.”- என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஆளுங்கட்சி ஒருமித்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றது. வாக்கெடுப்பு முடிவு மூலம் இது உறுதியாகும்.”- என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு பிரதமர் எதிர்ப்பை வெளியிடுகின்றார், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிராக வாக்களிப்பார்கள் என எதிரணி தரப்பில் கருத்து வெளியிடப்பட்டிருந்த நிலையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய பிரதமர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

“ஜனநாயகம் மற்றும் நீதித்துறை சுயாதீனத்துக்கான மரண அடி என்பது உட்பட அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் தவறான கருத்துகளை எதிரணிகள் சமூகத்தில் விதைக்க முற்படுகின்றன.

ஆளுங்கட்சி பற்றி பல கதைகள் பரப்பட்டுகின்றன. ஆனால் எமது கூட்டு பொறுப்பு என்னவென்பது நாளை (இன்று) தெரியவரும்.

ஆளுங்கட்சியில் உள்ள 158 எம்.பிக்களிடம் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் கிடையாது. கூட்டு பொறுப்புடனேயே செயல்படுகின்றோம்.

இதில் இருந்து கடுகளவேனும் நாம் விலகவில்லை. எமது ஒற்றுமை நாளை (இன்று) தெரியவம்.”- என்றார் பிரதமர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை