சீரற்ற காலநிலை: பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்
மலையகத்தில் அடை மழையுடன் சீரற்ற காலநிலை நிலவிவருவதால் இரு கல்வி வலயங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (25) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகளுக்கே இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டதாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் அடை மழை பெய்துவருகின்றது. மண்சரிவு அனர்த்தங்களும் இடம்பெற்றுள்ளன.




