இந்தியா உலகம் செய்தி

இமயமலையைக் காக்க இந்தியா, சீனாவிடம் ஒத்துழைப்பு கோரும் நேபாளம்

நேபாளம், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து, ‘இமயமலை காலநிலை மீள்தன்மை அமைப்பை’ (Himalayan Climate Resilience Mechanism) உருவாக்க வேண்டும் என்று நேபாள பிரதமர் பாலேந்திர ஷா வலியுறுத்தியுள்ளார்.

நேபாளம், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து, ‘இமயமலை காலநிலை மீள்தன்மை அமைப்பை’ (Himalayan Climate Resilience Mechanism) உருவாக்க வேண்டும் என்று நேபாள பிரதமர் பாலேந்திர ஷா வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர், புவி வெப்பமடைதலால் இமயமலையின் சூழலியல் கடுமையாகச் சீர்குலைந்து வருகிறது. காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்.

இமயமலைப் பகுதி சுமார் 200 கோடி மக்களின் வாழ்விடமாக உள்ளது. இது நேபாளத்தைத் தாண்டி பல நாடுகளுக்கு நீர், விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்தை வழங்கும் புவியின் மிக முக்கியமான உயிர்-ஆதாரம் ஆகும்.” – என்று சுட்டிக்காட்டினார்.

காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க நேபாளம், இந்தியா மற்றும் சீனா இணைந்து செயல்பட வேண்டும். இதன் மூலம் செயற்கைக்கோள் தரவுகளைப் பகிர்வது, ஆபத்தான பனிப்பாறை ஏரிகளைக் கண்காணிப்பது, முன்னெச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துவது மற்றும் பேரிடர் காலத்தில் எல்லை கடந்த உதவிகளை ஒருங்கிணைப்பது சாத்தியமாகும்.

பனிப்பாறை அடுக்குகள் உருகுவதால் பனி-பாறைச் சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படுகின்றன. இதனால் நேபாள-சீன எல்லைப்பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதோடு, வெள்ள நீர் இந்தியாவை நோக்கியும் பாய்ந்தது.

நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,450-ஐ கடந்துள்ள நிலையில், 6,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா, சீனா, ஐ.நா சபை மற்றும் பிற நட்பு நாடுகள் உடனடியாக வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒருபுறம் இயற்கைச் சீற்றங்கள் ஏழை நாடுகளை அச்சுறுத்தும் வேளையில், மறுபுறம் உலகளாவிய விநியோகச் சங்கிலி நியாயமற்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு ஏழை மக்களைத் தண்டிக்கிறது.

புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தவும், இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் இத்தகைய கூட்டு முயற்சி உடனடியாகத் தேவைப்படுகிறது” என நேபாளம் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி