கொழும்பிலிருந்து , பதுளை நோக்கிப் பயணித்த இபோச பஸ்ஸொன்று, இன்று (27) அதிகாலை இவ்வாறு விபத்துக்குள்ளானது. இலங்கை செய்தி

பதுளையில் பஸ் விபத்து – 42 பேர் காயம்

  • June 27, 2026
  • 0 Comments

பதுளை, தியத்தலாவை பகுதியில் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து இபோச பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தியத்தலாவை வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எவரது நிலைமையும் கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. கொழும்பிலிருந்து , பதுளை நோக்கிப் பயணித்த இபோச பஸ்ஸொன்று, இன்று (27) அதிகாலை இவ்வாறு விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பில் தியத்தலாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

ஐரோப்பா

ட்ரம்புக்கு என் மீது ஈர்ப்பு இருக்கலாம் – லண்டன் மேயர்

  • June 26, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன் மீது ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார் என்று தனக்குப் புரியவில்லை என லண்டன் மேயர் சாதிக் கான் கூறியுள்ளார். ஒருவேளை அமெரிக்க ஜனாதிபதிக்கு என் மீது ஒரு ஈர்ப்பு இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “ஜனாதிபதி டிரம்பின் மனதில் எனக்கு ஏன் இவ்வளவு இடம் இருக்கிறது என்று புரியவில்லை” என்று கூறினார். ஒருவேளை அமெரிக்க ஜனாதிபதிக்கு என் மீது ஒரு ஈர்ப்பு […]

உலகம்

பெய்ஜிங்கில் பரபரப்பு – 108 மாடிக் கட்டிடத்தில் மோதிய விமானம்

  • June 26, 2026
  • 0 Comments

சிறிய ரக விமானம் ஒன்று பெய்ஜிங்கின் மிக உயரமான கட்டிடத்தில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து 108 மாடிகளைக் கொண்ட குறித்த கட்டிடம் சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் அப்பகுதியூடான சாலைப் போக்குவரத்து மூடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் அவ்வழியே சென்றவர்களை  சம்பவத்தை  படம்பிடிப்பதைத் தடுத்துள்ளனர். பொலிஸார், தாங்கள் எடுத்த படங்களை நீக்குமாறு தனிநபர்களுக்கு அறிவுறுத்தியுடன், மக்களைக் கட்டிடத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகளிடமிருந்து உடனடியாக அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

உலகம்

கோதுமை, சோயாபீன்ஸை ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய தயாராகும் அமெரிக்கா?

  • June 26, 2026
  • 0 Comments

அமெரிக்க விவசாய ஏற்றுமதிகளுக்கு ஈரான் விரைவில் ஒரு புதிய சந்தையாக மாறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உணவுப் பற்றாக்குறையால் அந்நாடு தவித்து வருவதால், கோதுமை, சோயாபீன்ஸ் மற்றும் மக்காச்சோளத்தை கொள்வனவு செய்வதற்கு  ஈரானிய நிதியை அமெரிக்கா பயன்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க விவசாயிகளுடனான கலந்துரையாடலில் ட்ரம்ப் இதனை அறிவித்துள்ளார். ஈரான்  உணவுப் பற்றாக்குறையால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக ட்ரம்ப் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், தெஹ்ரான் இந்தக் கூற்றை உடனடியாக நிராகரித்தது. ஈரானின் […]

சோமாலிய பிரஜைகளுக்கு இனி 'மல்டிபிள்-என்ட்ரி' (Multiple-entry) விசாக்கள் வழங்கப்பட மாட்டாது. ஐரோப்பா செய்தி

சோமாலிய பிரஜைகளுக்கு விசா கட்டுப்பாடு: EU அதிரடி முடிவு

  • June 26, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தால் சோமாலியர்களுக்கு கடும் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சோமாலியர்களை மீண்டும் தங்கள் நாட்டிற்கு அழைத்துக்கொள்ள அந்நாட்டு அரசு மறுத்துள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த சோமாலிய ஜனாதிபதி, தமது நாட்டு மக்களை ஏற்கத் தயார் எனவும், மொழி தெரியாத ஏனைய நாட்டு நபர்களை சோமாலியர்கள் எனக் கருதி திருப்பி அனுப்புவதையே எதிர்ப்பதாகவும் விளக்கமளித்துள்ளார். 1991 இல் மத்திய அரசு வீழ்ந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுப் போர் மற்றும் 2006 […]

ஐரோப்பா

உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்த ரஷ்ய கடும்போக்காளர்கள் அழைப்பு

  • June 26, 2026
  • 0 Comments

உக்ரைனின் தொடர் தாக்குதல்கள் காரணமாக அதிருப்தி அடைந்துள்ள ரஷ்ய ஆதரவாளர்கள் இராஜதந்திர வழிகளை கைவிட்டு போரை தீவிரப்படுத்துமாறு புட்டினிடம் வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறான கோரிக்கைகள் புதியதல்ல என்றபோதும்   இந்த மாதம் உக்ரைன் மொஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் கிரிமியாவை இலக்காகக் கொண்டு நடத்திய  தாக்குதல்களும், பயணிகள் பேருந்துகள் மீது நடத்தப்பட்டதாக ரஷ்யா கூறிய இரண்டு கொடிய தாக்குதல்களும், அந்தக் கோரிக்கைகளை மேலும் கூர்மையாக்கித் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த கோரிக்கைளில்  முழுமையான அணிதிரட்டல்,  கீவ்வின் அரசாங்கப் பகுதியை அழித்தல், ஜனாதிபதி வொலோடிமிர் […]

ரவி மோகனின் 34-வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சோனி மியூசிக் நிறுவனம் இசை உரிமையை பெற்றுள்ளது. செய்தி பொழுதுபோக்கு

ஆகஸ்ட் 28 திரைக்கு வருகிறது “கராத்தே பாபு”

  • June 26, 2026
  • 0 Comments

நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் ” சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில், ‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இப்படத்தை இயக்கியுள்ளார். விறுவிறுப்பான அரசியல் திரில்லரான கராத்தே பாபு படம் தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரவி மோகனின் 34-வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சோனி மியூசிக் நிறுவனம் […]

இலங்கை

சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்ட 232 குற்றவாளிகள் வெளிநாடுகளில் தலைமறைவு

  • June 26, 2026
  • 0 Comments

இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்ட 232 குற்றவாளிகள் பல்வேறு நாடுகளில் பதுங்கியிருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர்களில் 96 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில்  37 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன் இனங்காணப்பட்ட குற்றவாளிகளை  கைது செய்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். கடந்த 20 மாதங்களில், சிவப்பு அறிவிப்புகளுக்கு உட்பட்ட […]

உலகம் செய்தி

அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்பட வேண்டாம் – வளைகுடா நாடுகளுக்கு தெஹ்ரான் எச்சரிக்கை

  • June 26, 2026
  • 0 Comments

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் தனது உரிமையை ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதேநேரம்  அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டாம் என வளைகுடா நாடுகளுக்கு  எச்சரிக்கையும் விடுத்துள்ளது. ஓமானுக்கு அருகே கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தெஹ்ரான் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி (Kazem Gharibabadi) எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், “தெளிவற்ற ஏற்பாடுகள், மாற்றுப் பாதைகள் அல்லது ஈரானின் பரிசீலனைகளுக்கு அப்பாற்பட்ட […]

அமெரிக்கா, பிரேசில், கனடா, மெக்சிகோ, கொலம்பியா, எல் சால்வடார், கியூபா உள்ளிட்ட அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளும், ஐ.நா. சபையும் (UN) மீட்புக் குழுக்களையும் மனிதநேய உதவிகளையும் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. உலகம் செய்தி

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – வெனிசுலாவில் சர்வதேச மீட்புக்குழுக்கள்

  • June 26, 2026
  • 0 Comments

வெனிசுலாவைத் தாக்கிய இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் அவசரப் பணிகளில் சர்வதேச மீட்புக் குழுவினர் இணைந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், கனடா, மெக்சிகோ, கொலம்பியா, எல் சால்வடார், கியூபா உள்ளிட்ட அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளும், ஐ.நா. சபையும் (UN) மீட்புக் குழுக்களையும் மனிதநேய உதவிகளையும் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. இந்த நிலநடுக்க பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 589 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆகப் […]