உலகம்

இந்தோனேசிய கப்பல் விபத்து – மேலும் ஐவரின் சடலங்கள் மீட்பு

இரண்டு வாரங்களுக்கு முன்பு கவிழ்ந்த இந்தோனேசிய கப்பல் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.

கிழக்கு ஜாவாவின் சுரபாயாவிலிருந்து தெற்கு கலிமந்தானின் பன்ஜார்மாசின் Banjarmasin ​in South Kalimantan நகருக்குச் சென்றுகொண்டிருந்த ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ (Virgo Transport 8) என்ற பயணிகள் கப்பல், செப்டம்பர் 13 அன்று ஜாவா கடலில் விபத்துக்குள்ளானது.

குறித்த கப்பலில் 243 பேர் பயணம் செய்த நிலையில், அவர்களில் 108 பேர் உயிர் பிழைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து எஞ்சியவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

தேடுதல் பணியின் 16-ஆவது நாளில் நீச்சல் வீரர்கள் கப்பலின் நிலையற்ற சிதைந்த பாகங்களுக்கு இடையே ஊடுருவிச் சென்று தேடுதல் பணியை மேற்கொண்டதாக, தேடுதல் மற்றும் மீட்புப் பிரிவின் மூத்த அதிகாரி ஹார்டியன்ஷ்யா புத்ரா தெரிவித்தார்.

கப்பலின் சிநைந்த பாகத்திற்கு அருகில் இருந்து 05 பேரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்