உலகம்

ஈரான் – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை இடம்பெற வாய்ப்பு

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய முயற்சியின் ஒரு பகுதியாக, நியூயார்க்கில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடனும், அமெரிக்கத் தரப்புடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த  வாய்ப்புள்ளதாக, விடயத்தை நன்கறிந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை இன்று அல்லது நாளைய தினம் கத்தாரின் மத்தியஸ்தர்கள்  மூலம் இடம்பெறலாம்  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் ஈரான் முன்வைத்த ஏழு நாள் கால அவகாசம் கொண்ட முன்மொழிவின் திருத்தப்பட்ட வடிவம் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அராக்சி நியூயார்க்கிலேயே தங்கியுள்ளார்.

மத்தியஸ்தர்களுடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்கத் தரப்பை யார் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.

எவ்வாறாயினும் அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்று ஈரான் முன்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்