ஈராக்கிலிருந்து முழுமையாக வெளியேறியது இத்தாலி படை
ஈராக்கில் இருந்து தங்களது கடைசிப் படைப்பிரிவையும் செவ்வாய்க்கிழமை (29) இத்தாலி முழுமையாகத் திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் இத்தாலியின் 12 ஆண்டுகால இராணுவப் பணி அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இராணுவத் தளத்தின் மீது இரவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, 2026 மார்ச் மாதத்திற்குள் இத்தாலி தனது பெரும்பாலான பாதுகாப்புப் படையினரை ஈராக்கிலிருந்து திரும்பப் பெற்றிருந்தது. ஐஎஸ் (Islamic State) பயங்கரவாத அமைப்பிற்கு […]













