அதிக விஷம் கொண்ட கபூன் வைப்பர் பாம்பு தப்பியோட்டம் – கலிபோர்னிய மக்களுக்கு எச்சரிக்கை
கலிபோர்னியாவின் சாண்டா அனாவில் அதிக விஷம் கொண்ட கபூன் வைப்பர் Gaboon viper பாம்பொன்று தப்பிச் சென்றுள்ள நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நான்கு முதல் ஐந்து அடி நீளமுள்ள ஆப்பிரிக்க இனப் பாம்பை பிரதேசவாசி ஒருவர் நேற்றைய தினம் அடையாளம் கண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாம்பை பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் தொழில்முறைப் பாம்புப் பிடிப்பாளர்கள் மற்றும் ஒரு நிபுணருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர், இருப்பினும் அது மீண்டும் காணப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை.
ஆகவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளைத் தாயகமாகக் கொண்ட கபூன் வைப்பர் பாம்புகளை, சிறப்பு அனுமதி இல்லாமல் கலிபோர்னியாவில் வளர்ப்பது சட்டவிரோதமாகும்.
இந்த இனம், உலகின் மிகப்பெரிய வைப்பர் பாம்புகளில் ஒன்றாகவும், அதிக விஷம் கொண்டதாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் கடி மனிதர்களுக்கு மரணத்தை விளைவிக்கக்கூடும்.




