ஐரோப்பா

பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த ரஷ்ய விமானத்திற்கு அனுமதி மறுப்பு

பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த ரஷ்ய விமானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் ரூப்பூர் அணுமின் நிலையத்திற்கு’ தேவையான எரிபொருளை சுமந்துக்கொண்டு பயணித்த ரஷ்ய விமானத்திற்கே இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் ‘ரோசாட்டம்’ நிறுவனம் தயாரித்த இந்த அணு எரிபொருள் அஜர்பைஜான், கஜகஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா வழியாகத் டாக்காவை வந்தடையத் திட்டமிடப்பட்டிருந்தது.

அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்திருந்த நிலையில் இறுதி நேரத்தில் பாகிஸ்தான் தன்நாட்டு வான்வெளியை பயன்படுத்த தடை விதித்தது.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் இது குறித்து தெரிவிக்கையில், தொழில்நுட்ப மற்றும் நடைமுறை சிக்கல்கள் காரணத்தினாலேயே அனுமதி தாமதமானதாகக் கூறியுள்ளது.

இருப்பினும், பங்களாதேஷ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் இதற்கான சரியான காரணத்தைப் பாகிஸ்தான் இதுவரை தெளிவாகத் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

சமீபகாலமாக பாகிஸ்தானுடன் நல்உறவை ஏற்படுத்த பங்களாதேஷ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை அந்நாட்டிற்கு ஒரு மிகப்பெரிய ராஜதந்திர பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்