இலங்கை

பொலிஸ் காவலில் இருந்த மற்றொரு நபர் உயிரிழப்பு

கொபெய்கனே, பெத்தேகம பகுதியில் பொலிஸ் காவலில் இருந்த நபர் ஒருவர் உயரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த  கடந்த திங்கட்கிழமை (25) நண்பகல் வேளையில் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு   பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,  நேற்று முன்தினம் (27) இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சந்தேகநபரின் மரணத்தைத் தொடர்ந்து, அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பிரதேசவாசிகள் ஐவரை கொபெய்கனே பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து ஒரு மணித்தியாலத்திற்குள் பொலிஸாருக்கு அறிவித்து, எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாகவே பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகக் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், பிரதேசவாசிகளால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால், அவர் உயிரிழப்பதற்கு முன்பே வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கு முன்னரும் உயிரிழந்த நபரால் மேற்கொள்ளப்பட்ட திருட்டுகள் குறித்து பலமுறை பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதாகவும், அப்போது அவரைப் பிடித்துத் தன்னிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாரே அறிவுறுத்தியதாகவும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்