அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை பரிசோதித்த மருத்துவக் குழுவில் இடம்பெற்ற 10 மருத்துவர்களையும், எதிர்வரும் 6 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. செய்தி

சுரேஷ் சாலேயின் மருத்துவ அறிக்கையை தயாரித்த 10 வைத்தியர்களுக்கு அழைப்பாணை

  • October 3, 2026
  • 0 Comments

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை பரிசோதித்த மருத்துவக் குழுவில் இடம்பெற்ற 10 மருத்துவர்களையும், எதிர்வரும் 6 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்றுத் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர், கொழும்பு நீதிவான் பாசன் அமரசேன இந்த அழைப்பாணையை வெளியிட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலே, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் […]

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்து ஒக்டோபர் 10 திகதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என CJP தலைவர் அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார். இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

ஒக்டோபர் 10 மீண்டும் போராட்டம்: CJP அறிவிப்பு

  • October 3, 2026
  • 0 Comments

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்து ஒக்டோபர் 10 திகதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என CJP தலைவர் அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார். ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை என்றால் டெல்லியை நோக்கிப் பேரணியாகச் சென்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்த திப்கே, ‘சலோ டெல்லி’ (Chalo Delhi) அழைப்பையும் விடுத்தார். மேலும், டெல்லி காவல்துறை தங்களைத் தடுத்தால், தடுக்கப்படும் இடமே போராட்டக் […]

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் ஆய்வக ஊழியர் ஒருவர் பிளேக் (plague) நோயால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சுமார் 200 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பா

ரஷ்யாவில் பிளேக் நோய் அச்சுறுத்தல் – 200 பேர் மருத்துவக் கண்காணிப்பில்

  • October 3, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் ஆய்வக ஊழியர் ஒருவர் பிளேக் (plague) நோயால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சுமார் 200 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாரியா ஷா (Daria Sh.) என்று அடையாளம் காணப்பட்ட 28 வயதுடைய பெண் இர்குட்ஸ்க் (Irkutsk) பகுதியில் உள்ள பிளேக் தடுப்பு ஆய்வு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. கடுமையான அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து ஷெலேகோவ் (Shelekhov) நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வென்டிலேட்டர் (செயற்கை சுவாசக் […]

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவரும், மூத்த தமிழ் ஆர்வலருமான பழ. நெடுமாறன் அவர்களின் மகன் திரு. பழ. மாணிக்கம் (57) , ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் (01) காலமானார். ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

பௌத்த மதத்தை தழுவிய பழ.நெடுமாறவின் மகன் மெல்போர்னில் காலமானார்

  • October 3, 2026
  • 0 Comments

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவரும், மூத்த தமிழ் ஆர்வலருமான பழ. நெடுமாறன் அவர்களின் மகன் திரு. பழ. மாணிக்கம் (57) , ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் (01) காலமானார். கடந்த பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வந்த பழ. மாணிக்கம் , பௌத்த மதத்தைத் தழுவி பௌத்தத் துறவியாக எளிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். கடந்த ஒரு மாத காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் […]

ஐரோப்பா

உக்ரைனின் பாலம் ஒன்றை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் – போக்குவரத்து ஸ்தம்பிப்பு

  • October 3, 2026
  • 0 Comments

உக்ரைனின் உள்கட்டமைப்பின் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் ‘சவுத் பிரிட்ஜ்’ (South Bridge) மீது புதிய தாக்குதல் நடத்தப்பட்டதாக கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ Vitali Klitschko உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் பெரும் தாக்குதலைத் தொடர்ந்து, அப்பாலம் இப்போது வாகனப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ சேவைக்காக மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே தீவிரமடைந்து வரும் ரஷ்யத் தாக்குதல்கள் “கீவ் நகரத்தைச் சிதைத்து வருவதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாஸ்கோ நகரம் கீவ்வின் “முக்கிய உள்கட்டமைப்பு, போக்குவரத்து […]

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள 28 முக்கிய இடங்களின் பெயர்களை முறைப்படுத்தி, அதிகாரப்பூர்வமாகத் தரப்படுத்தி (Standardised) இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா செய்தி

லடாக்கிலுள்ள 28 இடங்களின் பெயர்களைத் தரப்படுத்தியது இந்தியா

  • October 3, 2026
  • 0 Comments

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள 28 முக்கிய இடங்களின் பெயர்களை முறைப்படுத்தி, அதிகாரப்பூர்வமாகத் தரப்படுத்தி (Standardised) இந்திய அரசு அறிவித்துள்ளது. நிலவியல் அளவைத்துறை மற்றும் அரசுப் பதிவேடுகளில் இருந்த பெயர்களில் காணப்பட்ட மாறுபாடுகளைக் களைந்து, சீரான மற்றும் தெளிவான உச்சரிப்பை உறுதிசெய்யும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லடாக்கின் கலாச்சார மற்றும் உள்ளூர் அடையாளங்களைப் பிரதிபலிக்கும் வகையில், Survey of India மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் ஆலோசனைகளுடன் இந்தத் திருத்தப்பட்ட பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. எல்லைப் பகுதிகளில் நிர்வாகத் […]

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) கடல் பகுதியில் குவைத் நாட்டின் கொடியுடன் சென்ற 'எம்.டி. காசிமா III' (MT Kazimah III) என்ற எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீது ஏவுகணை அல்லது வெடிபொருள் (projectile) தாக்கியதில், அதில் பயணித்த 5 இந்திய பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியா செய்தி

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் எண்ணெய் கப்பல்மீது தாக்குதல்: இந்தியர்கள் மீட்பு

  • October 3, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) கடல் பகுதியில் குவைத் நாட்டின் கொடியுடன் சென்ற ‘எம்.டி. காசிமா III’ (MT Kazimah III) என்ற எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீது ஏவுகணை அல்லது வெடிபொருள் (projectile) தாக்கியதில், அதில் பயணித்த 5 இந்திய பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஓமன் நாட்டின் அதிகாரிகளுடன் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்ட விரைவான மீட்பு நடவடிக்கைகளின் மூலம், கப்பலில் இருந்த ஐந்து […]

உலகம் செய்தி

ஹூதி போராளிகளுக்கு எதிராக தாக்குதல் ஒன்றை திட்டமிடும் சவுதி அரேபியா

  • October 3, 2026
  • 0 Comments

ஈரான் ஆதரவு ஹூதி போராளிகளுக்கு எதிராக சவூதி அரேபியா தாக்குதல் ஒன்றை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொய்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, யேமனில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மண்டேப் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறும் நோக்கில், இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையின் அளவைப் பொறுத்து, 100,000-க்கும் மேற்பட்ட யேமன் துருப்புகள் இதில் ஈடுபடக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வாரத்தில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த தாக்குதல் ரியாத்தின் மேற்பார்வையின் கீழ் […]

பஞ்சாப் மாநில எல்லைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரு பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியா செய்தி

இந்திய எல்லையில் இரு பாகிஸ்தானியர்கள் சுட்டுக்கொலை: மீண்டும் பதற்றம்

  • October 3, 2026
  • 0 Comments

பஞ்சாப் மாநில எல்லைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரு பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் இரு நாடுகளும் போரின் விளிம்பிலிருந்து பின்வாங்கிய ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த இச்சம்பவம், அண்டை நாடுகளிடையே மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. கிழக்கு பாகிஸ்தானின் கசூர் (Kasur) மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதமேந்தாத மூன்று பொதுமக்கள், எல்லைக் கம்பத்தைக் கடந்து சில அடிகள் முன்னெடுத்து வைத்‌தபோது இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் (BSF) துப்பாக்கிச்சூடு […]

உலகம்

விமானத்தை மோதச் செய்வதே இலக்கு – FlyDubai தாக்குதல்தாரி வாக்குமூலம்

  • October 3, 2026
  • 0 Comments

இஸ்ரேல் நோக்கிச் சென்ற ‘ஃப்ளை-துபாய்’ (FlyDubai) விமானத்தின் விமானியை தாக்கிய துணை விமானி அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் 29 வயதான ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல் ஹம்மாமி Hamam Al Hammami, என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு ‘ஓமன் ஏர்’ (Oman Air) நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, ​​பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு விமானப் பணிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை குறித்த விவரங்களை அறிந்த பல அதிகாரிகள் ஏபிசி செய்தி சேவையிடம் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். […]