இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

ஒக்டோபர் 10 மீண்டும் போராட்டம்: CJP அறிவிப்பு

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்து ஒக்டோபர் 10 திகதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என CJP தலைவர் அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்து ஒக்டோபர் 10 திகதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என CJP தலைவர் அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார்.

ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை என்றால் டெல்லியை நோக்கிப் பேரணியாகச் சென்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்த திப்கே, ‘சலோ டெல்லி’ (Chalo Delhi) அழைப்பையும் விடுத்தார்.

மேலும், டெல்லி காவல்துறை தங்களைத் தடுத்தால், தடுக்கப்படும் இடமே போராட்டக் களமாக மாறும் என்றும் எச்சரித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் (SIR) முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் CJP குற்றம் சாட்டியுள்ளது.

அக்டோபர் 10 போராட்டம் அமைதியான முறையில் மகாத்மா காந்தியின் வழியில் நடைபெறும் என உறுதியளித்த திப்கே, சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலை விரும்பும் அனைத்துக் குடிமக்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி