உலகம் செய்தி

ஹூதி போராளிகளுக்கு எதிராக தாக்குதல் ஒன்றை திட்டமிடும் சவுதி அரேபியா

Saudi Arabia carried out 356 executions last year

ஈரான் ஆதரவு ஹூதி போராளிகளுக்கு எதிராக சவூதி அரேபியா தாக்குதல் ஒன்றை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரொய்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, யேமனில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மண்டேப் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறும் நோக்கில், இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் அளவைப் பொறுத்து, 100,000-க்கும் மேற்பட்ட யேமன் துருப்புகள் இதில் ஈடுபடக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் வாரத்தில் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த தாக்குதல் ரியாத்தின் மேற்பார்வையின் கீழ் யேமன் படைகளால் வழிநடத்தப்படும் என்றும், சவூதி வான்வழித் தாக்குதல்களால் ஆதரிக்கப்படும் என்றும் விடயத்தை நன்கறிந்த ஆறுபேர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பாப் அல்-மண்டேப்பைச் சுற்றி ஒரு குறுகிய கவனம் கொண்ட தாக்குதலை நடத்துவதா அல்லது அல்-பைதாAl-Bayda , மாரிப் Marib, தைஸ்Taiz மற்றும் அல்-ஜாவ்ஃப் Al-Jawf,  ஆகிய பல முனைகளில் ஒருங்கிணைந்த தாக்குதல்களை உள்ளடக்கிய ஒரு பரந்த தாக்குதலை நடத்துவதா என சவூதி அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக வளைகுடா மற்றும் யேமன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி