ஐரோப்பா

ஸ்பெயினில் வீட்டுவசதி நெருக்கடிக்கு தீர்வுக்கோரி மக்கள் போராட்டம்

  • October 3, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் வீட்டுவசதி நெருக்கடிக்கு தீர்வுக்காணுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் முன்வைத்த வீட்டுவசதி தொடர்பான நடவடிக்கைகள் எதிர்க்கட்சியால் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்தே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். இதன்போது பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் பதாகைகளையும் போராட்டக்காரர்கள் கையில் ஏந்தியிருந்தனர். அரசியல் கட்சிகளின் விருப்பங்களுக்கு ஏற்ப மக்கள்தான் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர, மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப அரசியல்வாதிகள் தங்களை மாற்றிக்கொள்வதில்லை என்பதையே இது நிரூபிக்கிறது. நிலைமை இப்படியே தொடர […]

அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரித்தானியாவின்  முக்கிய விமானப்படைத் தளத்தைத் தாக்கும் சதித்திட்டம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரட்டை குடியுரிமைக் கொண்ட ஈரான் வம்சாவளி இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பா செய்தி

பிரித்தானியா தூதுவருக்கு ஈரான் அழைப்பாணை

  • October 3, 2026
  • 0 Comments

அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரித்தானியாவின்  முக்கிய விமானப்படைத் தளத்தைத் தாக்கும் சதித்திட்டம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரட்டை குடியுரிமைக் கொண்ட ஈரான் வம்சாவளி இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும், மேற்படி சம்பவம் தொடர்பில் தமது நாடுமீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ஈரான், எதிர்ப்பை பதிவுசெய்வதற்காக பிரித்தானிய தூதுவருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது. மேற்கு பிரித்தானியாவில் உள்ள  RAF Fairford  விமானப்படைத் தளத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறி 25 வயதான அந்த நபர் கடந்த […]

ஐரோப்பா

RAF Fairford சம்பவம் – தடுத்துவைக்கப்பட்டிருந்த பிரஜை பிணையில் விடுதலை

  • October 3, 2026
  • 0 Comments

RAF Fairford சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றொரு நபர் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து-ஈரானிய இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவரே இவ்வாறு இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் லண்டனில் உள்ள அவருக்கு சொந்தமான  இரு இடங்களில் சோதனை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் RAF Fairford சம்பவம்  தொடர்பான விரிவான விசாரணைகள் தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2032 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பிரிக்பேன் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ சின்னங்கள் (Emblems), ஒலிம்பிக் அமைப்பின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலேயே தவறுதலாக வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தி விளையாட்டு

முன்கூட்டியே யூடியூப்பில் கசிந்த ஒலிம்பிக் லோகோவால் பரபரப்பு

  • October 3, 2026
  • 0 Comments

  திங்கட்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவே யூடியூப் பக்கத்தின் முன்னோட்டப் படம் (Preview Image) மற்றும் விளக்கத்தில் இச்சின்னம் முழுமையாகக் கசிந்தது. ‘காக்கட்டூ’ (Cockatoo) எனப்படும் ஆஸ்திரேலியக் கிளிப் பறவையை அடிப்படையாகக் கொண்டு இந்த லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘குயின்ஸ்லாந்து’ மாநிலத்தின் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த லோகோவில், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் சுடரைக் குறிக்கும் வகையில் கிளியின் கொண்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. தகவல் கசிந்த உடனடியாக யூடியூப் பக்கத்திலிருந்து அந்தப் படம் நீக்கப்பட்டது. இது […]

flydubai FZ1073 விமானத்தில் பயணித்த 174 பேரின் உயிரைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி கெப்டன் ஸ்மித் மச்சாரை (Captain Smit Machchhar) துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். இந்தியா உலகம் செய்தி

இந்திய விமானியின் துணிச்சலை பாராட்டிய துபாய் இளவரசர்

  • October 3, 2026
  • 0 Comments

flydubai FZ1073 விமானத்தில் பயணித்த 174 பேரின் உயிரைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி கெப்டன் ஸ்மித் மச்சாரை (Captain Smit Machchhar) துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். நடந்த ஆபத்தான சம்பவத்தின் போது, சாதுரியமாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டு விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க உதவியதற்காக அவரது சிறந்த சேவையைப் பாராட்டி இளவரசர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்திய விமானியை தாக்கிவிட்டு, விமானத்தை வீழ்த்துவதற்கு முற்பட்ட ஓமன் நாட்டு […]

ஐரோப்பா

ஸ்பெயினில் மதுபான விடுதி இடிந்து விழுந்து விபத்து – 11 பேர் மருத்துவமனையில்

  • October 3, 2026
  • 0 Comments

ஸ்பெயினின்  லா ரியோஜாவில் (La Rioja) உள்ள மதுபான விடுதி ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 11 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் 25 முதல் 30 பேர் வரை உள்ளே சிக்கிக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான விடுதியின் தரைத்தளம் இடிந்து விழுந்ததாகவும், அதைத் தொடர்ந்து மேற்கூரையும் இடிந்து விழுந்ததாகவும் உயிர் பிழைத்தவர்கள் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 8ஆம் திகதி வியாழக்கிழமை வரையான மூன்று நாள்களும், ஒன்பது அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இலங்கை செய்தி

யாழ். பல்கலை பொதுப் பட்டமளிப்பு விழா 6 ஆம் திகதி ஆரம்பம்

  • October 3, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 8ஆம் திகதி வியாழக்கிழமை வரையான மூன்று நாள்களும், ஒன்பது அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக விவரிப்பு நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில், பல்கலைக்கழக சபை அறையில் இடம்பெற்றது. இந்த ஊடக விவரிப்பில்,பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக் குழுத் தலைவரும் கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் நாகமுத்து […]

உலகம்

அரசுக்கு எதிரான போராட்டம் – ஈரானில் நபர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

  • October 3, 2026
  • 0 Comments

2026-ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களின்போது காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு  தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை ஈரான் அரசு இன்று அறிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் உச்சமடைந்த பெருந்திரள் போராட்டங்களின்போது பாதுகாப்புப் படையினரைத் தாக்கியதாக சியாவாஷ் ஜம்ஷிதி (Siavash Jamshidi) மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அக்காலகட்டத்திலிருந்து, இக்கலவரங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கைகளை ஈரான் அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். “துப்பாக்கியைக் காட்டி […]

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து (UAE) இஸ்ரேலுக்குச் சென்று கொண்டிருந்த flydubai FZ1073 விமானத்தின் துணை விமானி, கோடாரியால் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த முயன்றதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை அரசு வழக்கறிஞர் சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

flydubai சம்பவம்: பயங்கரவாத தாக்குதல் முயற்சியென உறுதி

  • October 3, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து (UAE) இஸ்ரேலுக்குச் சென்று கொண்டிருந்த flydubai FZ1073 விமானத்தின் துணை விமானி, கோடாரியால் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த முயன்றதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை அரசு வழக்கறிஞர் சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹம்மாம் அல்-ஹம்மாமி (Hammam al-Hammami) என்பவரே அந்த துணை விமானி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமை 170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த இந்த விமானத்தில், துணை விமானி காக்பிட்டில் […]

ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தீவிர இராணுவத் தாக்குதலை நடத்தச் சவூதி அரேபியா திட்டமிட்டு வருவதாக பிராந்திய மற்றும் மேற்குலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சவூதிக்கு துருக்கி, பாகிஸ்தான் ராணுவ உதவி

  • October 3, 2026
  • 0 Comments

ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தீவிர இராணுவத் தாக்குதலை நடத்தச் சவூதி அரேபியா திட்டமிட்டு வருவதாக பிராந்திய மற்றும் மேற்குலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செங்கடல் கப்பல் பாதையைப் பாதுகாப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, கடலோரப் பகுதிகளை மீட்கும் இலக்குடன் அல்லது பல முனைகளில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமையக்கூடும் எனக் கருதப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த இராணுவ நடவடிக்கைக்கு, சவூதி […]