அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: நாளை தீர்க்கமான முடிவு
அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் எதிரணிகள் ஆலோசனை நடத்திவருகின்றன என்று தெரியவருகின்றது. சிங்கள வார இதழொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் நிலவும் நீதிபதிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை எதிரணிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், இது தொடர்பில் எதிரணிகள் இணைந்து சபாநாயகரிடம், கையளித்த கடிதத்திற்கும் அரச தரப்பில் இருந்து உரிய பதில் வழங்கப்படவில்லை. ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு எதிரணி வசம் […]













