இலங்கை செய்தி

இலங்கையில் 24 மணிநேரத்துக்குள் 1,069 பேருக்கு டெங்கு

இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள 47,179 பேர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோயினால் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் மிகக் கடுமையான உச்சத்தை எட்டியுள்ளது.

குறிப்பாக கடந்த 24 மணிநேரத்துக்குள் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தற்காலிக இயக்குநர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள 47,179 பேர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு நோயினால் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

வழக்கமாக ஒரு நாளில் பதிவாகும் எண்ணிக்கையை விட, தற்போது தினசரி தொற்று விகிதம் பல மடங்கு அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நாடு தற்போது ஒரு அதிதீவிர இடர் நிலையை எதிர்கொண்டுள்ளதால், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை