இந்தியா ஐரோப்பா செய்தி

இந்தியா – ஐரோப்பா வர்த்தக ஒப்பந்தம் டிசம்பருக்குள் கைச்சாத்து

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, இந்திய ஏற்றுமதியில் சுமார் 93 சதவீத பொருட்களுக்கு வரிவிலக்கு கிடைப்பதோடு, ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர பொருட்கள் மலிவாகக் கிடைக்கும்.

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் கையெழுத்தாகும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த ஒப்பந்தம் 2027 பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என்றும் எனவும் கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, இந்திய ஏற்றுமதியில் சுமார் 93 சதவீத பொருட்களுக்கு வரிவிலக்கு கிடைப்பதோடு, ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர பொருட்கள் மலிவாகக் கிடைக்கும்.

உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த இரு தரப்பினரும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த வர்த்தகக் கூட்டணிக் கொள்கையைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இது தவிர, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுடனும் இந்தியா வர்த்தக ரீதியான பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சர்வதேச ஒப்பந்தங்கள் இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி