உளவாளியுடன் உறவு: Nvidia தலைமை அதிகாரி ராஜினாமா
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான என்விடியாவின் (Nvidia) தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், திருமணத்துக்கு அப்பாற்பட்ட காதல் உறவுகள் தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவருடனான காதல் தொடர்பு மற்றும் நிறுவன ஊழியர் ஒருவருடனான உறவு குறித்த செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து இந்தப் பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.
ஜென்சன் ஹுவாங்குக்குப் பதிலாக, புதிய நிரந்தர தலைமைச் செயல் அதிகாரி நியமிக்கப்படும் வரை, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான கோலெட் கிரெஸ் இடைக்கால தலைமைச் செயல் அதிகா
இதன் காரணமாக ஒரே நாளில் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 320 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை இழக்கப்பட்டதுடன், அந்த வாரத்தில் மொத்த இழப்பு 600 பில்லியன் டொலர்களைத் தாண்டியது. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 3.9 டிரில்லியன் டொலர்களாகக் குறைந்தது.




