ஈரான் மோதல் : கூட்டணி தலைவர்களின் உறவில் விரிசல், அதிருப்தியில் ட்ரம்ப்
ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதா வேண்டாமா என்பது குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல்களை மீண்டும் தொடங்குமாறு நெதன்யாகு தினமும் ட்ரம்பை வற்புறுத்தி வருவதாகவும், ஆனால் இந்த மோதல் தொடர்பான இடைக்காலத் தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து ட்ரம்ப் தற்போது ஒரு இராஜதந்திர அணுகுமுறையையே விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இந்த அழைப்பு மோதல் நோக்கம் கொண்டது அல்ல என்று நெதன்யாகுவின் அலுவலகம் மறுத்துள்ளது.
எவ்வாறாயினும் நெதன்யாகுவின் இராணுவ நடவடிக்கையில் ட்ரம்ப் அதிருப்தி அடைந்துள்ளதாக முன்னதாக கூறப்பட்டிருந்தது. இது தொடர்பில் இரு தலைவர்களுக்கும் இடையே கருத்து வேற்றுமைகள் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





