எதியோப்பியாவின் சட்டமன்ற தேர்தல் – ஆளும் கட்சி அமோக வெற்றி
எதியோப்பியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் அபி அகமதுவின் செழிப்புக் கட்சி (Prosperity Party ) மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தன.
முடிவுகளின் படி ஆளும் கட்சியான செழிப்புக் கட்சி (Prosperity Party ) பிரதிநிதிகள் சபையில் உள்ள 486 இடங்களில் 438 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது.
இந்த தேர்தலில் 40 இற்கும் மேற்பட்ட கட்சிகள் போட்டியிட்ட போதிலும் ஆளும் கட்சி 64 தொகுதிகளில் போட்டியின்றி வெற்றி பெற்றது.
மேலும் இந்த தேர்தல் முடிவுகள் 2018 முதல் ஆட்சியில் இருக்கும் அபி அகமதுவிற்கு மேலும் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை வழங்கக்கூடும்.




