இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜய்க்கு இன்று பிறந்தநாள்: தவெகவினர் கொண்டாட்டம்

இன்று தனது 52 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், தமிழக முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய், தனது 52-வது பிறந்தநாளை இன்று (22) கொண்டாடுகிறார்.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாட தவெக தொண்டர்கள் திட்டமிட்டு, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்நிலையில், முதல்வர் விஜய்க்கு சமூக வலைதள பதிவு மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“தமிழக முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்துக்கும் பிரார்த்திக்கிறேன்” என அதில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை இன்று (ஜூன் 22) காலை தொடங்கிய போது, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக தலைவர் ஸ்டாலின், “முதல்வர் ஜோசப் விஜய்க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்இ தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் – உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்” என தனது சமூக வலைதள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி