அரசியல் இலங்கை செய்தி

அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: நாளை தீர்க்கமான முடிவு

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு எதிரணி வசம் பெரும்பான்மை பலம் இல்லை. எனவேதான் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் எதிரணிகள் ஆலோசனை நடத்திவருகின்றன என்று தெரியவருகின்றது.

சிங்கள வார இதழொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் நிலவும் நீதிபதிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை எதிரணிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், இது தொடர்பில் எதிரணிகள் இணைந்து சபாநாயகரிடம், கையளித்த கடிதத்திற்கும் அரச தரப்பில் இருந்து உரிய பதில் வழங்கப்படவில்லை.

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு எதிரணி வசம் பெரும்பான்மை பலம் இல்லை. எனவேதான் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் நாளை (23) கூடவுள்ளது. இதன்போது இது பற்றி எதிரணிகள் ஆராய்ந்து, முடிவொன்றை எடுக்கவுள்ளன என்று தெரியவருகின்றது.

எதிரணிகளின் நாடாளுமன்றக் குழு கூட்டங்களும் நாளை நடைபெறவுள்ளது. இதன்போது இது பற்றி ஆராயப்படவுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை