பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில அரசியல் இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: உதய கம்மன்பில சர்ச்சை கருத்து

  • June 23, 2026
  • 0 Comments

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் ஊடாக கோட்டாபய ராஜபக்ச பிரதிபலன் அடையவில்லை. மாறாக பேராயரே பிரதிபலன் அடைந்துவருகின்றார்.” – என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியை வருமாறு, “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவே பிரதிபலன் அடைந்தார் என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் கருத்து வெளியிட்டுவருகின்றனர். 2018 உள்ளாட்சிசபைத் தேர்தலில் […]

ராஸ் லப்பான் துறைமுகமானது உலகின் மிகப்பெரிய செயற்கை துறைமுகமாகும். மேலும் இது உலகின் மிகப்பெரிய எல்என்ஜி (LNG) ஏற்றுமதி வசதியைக் கொண்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

எரிவாயு ஆலையில் வெடி விபத்து: 12 இந்தியர்கள் பலி

  • June 23, 2026
  • 0 Comments

கத்தாரில் உள்ள மிகப்பெரிய எரிவாயு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 66 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த 13 பேரில் 12 பேர் இந்தியர்கள் என தெரியவருகின்றது. ராஸ் லப்பான் (Ras Laffan) தொழிற்துறை மண்டலத்தில் அமைந்துள்ள நகரின் பிரதான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) சுத்திகரிப்பு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த விபத்து ஏற்பட்டதாக கத்தார் உள்நாட்டு விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெடிவிபத்தின் காரணமாக அந்த நகரத்தின் […]

Norway have lost only once in their last 18 matches and will take on France in a compelling battle for top spot in the group in Boston on Friday செய்தி விளையாட்டு

அசத்தலான ஆட்டம்: அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது Norway

  • June 23, 2026
  • 0 Comments

New York நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற (Group I) லீக் போட்டியில், நோர்வே அணி 3-2 என்ற கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் (Last 32) தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் நோர்வே நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இரண்டு கோல்களை (Brace) அடித்து அசத்தினார். திங்கட்கிழமை நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் முதல் பாதியில்,நோர்வே அணியின் மாற்று வீரர் மார்கஸ் ஹோம்ஹிரென் பெடர்சன் ஒரு கோல் அடித்து அணியை […]

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட தடயவியல் அகழ்வாய்வுப் பணிகளின் 31ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றன. இலங்கை செய்தி

செம்மணியில் இதுவரை 412 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • June 23, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட தடயவியல் அகழ்வாய்வுப் பணிகளின் 31ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றன. நேற்றைய தின அகழ்வாராய்ச்சியின் போது புதிதாக அடையாளம் காணப்பட்ட 7 மனித என்புத் தொகுதிகளும் முறைப்படி சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. இதில் 3 மனித என்புத் தொகுதிகள் ஒரே நேரில் (ஒரே நேர்கோட்டில்) புதைக்கப்பட்டவாறு […]

Lionel Messi broke the record with Argentina's first goal against Austria at the Dallas Stadium in Texas in the US செய்தி விளையாட்டு

உலகக்கிண்ண தொடரில் சாதனை படைத்தார் Lionel Messi

  • June 23, 2026
  • 0 Comments

ஆஸ்திரியாவுக்கு எதிரான Group J லீக் போட்டியில் , அர்ஜென்டினா அணியின் தொடக்க கோலை அடித்ததன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை லியோனல் மெஸ்ஸி Lionel Messi படைத்துள்ளார். 6 உலகக் கோப்பை தொடர்களில் அவரது இதுவரை அவர் 18 கோல்களை அடித்துள்ளார். திங்கட்கிழமை நடைபெற்ற இரண்டாவது குரூப் போட்டியில், ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த கோல் மூலம் அவர் இந்த வரலாற்றுப் பட்டியலின் முதலிடத்தைப் பிடித்தார். […]

கருத்து & பகுப்பாய்வு

06 பிரதமர்கள், பல அரசியல் மாற்றங்களை கண்ட லாரி

  • June 22, 2026
  • 0 Comments

அரசாங்கங்கள் எழுகின்றன, வீழ்கின்றன, பிரதமர்கள் வருகிறார்கள், போகிறார்கள்,  ஆனால்,   டவுனிங் தெருவில்  ஒரு குடியிருப்புவாசி மட்டும் தொடர்ந்து தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.  அவர்தான் லாரி என்ற பூனை. பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், சமீபத்திய ஆண்டுகளில் நிகழ்ந்துவரும் அரசியல் மாற்றங்களின் பட்டியலில் மேலும் ஒரு வியத்தகு தலைமை மாற்றத்தை பிரித்தானியா காணவிருக்கிறது. புகழ்பெற்ற அந்தக் கருப்புக் கதவுக்குப் பின்னால் உள்ள முகங்கள் மாறிக்கொண்டே இருந்தாலும், நன்கு பரிச்சயமான […]

ஐரோப்பா

பிரான்ஸில் 49 பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை : மூவர் உயிரிழப்பு

  • June 22, 2026
  • 0 Comments

பிரான்ஸில் வெப்பநிலை உச்சம் தொட்டுள்ள நிலையில் சுமார் 49 பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் , கிட்டத்தட்ட 2,700 பாடசாலைகளை மூட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வாரம் மூன்று முதியவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்திலும் பல பகுதிகளில்  வெப்பநிலை உயர்வுக்கான சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும் 200,000-க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான மரணங்களைச் சந்தித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் பாரிய தீவிபத்து – 15 மாணவர்கள் பலி

  • June 22, 2026
  • 0 Comments

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், பயிற்சி மையம் இயங்கி வந்த கட்டிடம் ஒன்றில்  இன்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 15 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது, ​​ஏராளமானோர் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்ட நிலையில் பல மாணவர்கள் தற்காத்துக்கொள்ளும் நோக்கில் கட்டிடத்தில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது. சுமார் ஒரு மணிநேரம் போராடிய பின் தீ அணைக்கப்பட்டதாகவும், இதன் பின்னர் இடிபாடுகளில் இருந்து 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கட்டிடத்தில் இருந்து குதித்து  காயமடைந்த […]

ஐரோப்பா

பிரான்ஸில் காரொன்றில் இருந்து இரு குழந்தைகள் சடலமாக மீட்பு

  • June 22, 2026
  • 0 Comments

பிரான்ஸில் கார் ஒன்றில் இருந்து இரு சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பிரான்சின் கார்பென்ட்ராஸ் (Carpentras) நகரின் குடியிருப்பு வளாகம் ஒன்றில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் இருந்து  இரண்டு மற்றும் நான்கு வயதுடைய இரு குழந்தைகளை பொலிஸார் சடலமாக மீட்டுள்ளனர். இந்நிலையில் மித மிஞ்சிய வெப்ப அலையால் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வெப்பநிலை 39°C-ஐ எட்டியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மேற்படி இரு குழந்தைகளும் தாய்க்கு தெரியாமல் காருக்குள் ஏறியிருக்கலாம் என […]

உலகம்

எரிபொருள் விற்பனை : ஈரானுக்கு பொது உரிமத்தை வழங்கியது அமெரிக்கா!

  • June 22, 2026
  • 0 Comments

ஈரான்  எரிபொருள் விற்பனை செய்வதற்கான தடையை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதன்படி, அறுபது நாட்களுக்கு செல்லுபடியாகும் பொது உரிமத்தை வழங்குக  அமெரிக்க கருவூலத் துறை நடவடிக்கை  எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. “சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு இணங்க, ஹோர்முஸ் ஜலசந்தியில் தடையற்ற மற்றும் வெளிப்படையான போக்குவரத்திற்கும், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆய்வாளர்களைத் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கவும் ஈரான் உறுதியளித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது […]