ஐரோப்பா

பிரான்ஸில் காரொன்றில் இருந்து இரு குழந்தைகள் சடலமாக மீட்பு

பிரான்ஸில் கார் ஒன்றில் இருந்து இரு சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பிரான்சின் கார்பென்ட்ராஸ் (Carpentras) நகரின் குடியிருப்பு வளாகம் ஒன்றில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் இருந்து  இரண்டு மற்றும் நான்கு வயதுடைய இரு குழந்தைகளை பொலிஸார் சடலமாக மீட்டுள்ளனர்.

இந்நிலையில் மித மிஞ்சிய வெப்ப அலையால் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வெப்பநிலை 39°C-ஐ எட்டியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே மேற்படி இரு குழந்தைகளும் தாய்க்கு தெரியாமல் காருக்குள் ஏறியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும்  தாயிடம் விசாரணைகள் நடத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்