நேட்டோ மீது தாக்குதல் நடத்தினால் அனைத்தையும் அழித்துவிடுவோம் – நேட்டோ தளபதி எச்சரிக்கை
நேட்டோவின் பிரதேசத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் அளவுக்கு “முட்டாள்தனமாக” நடந்துகொண்டால், அத்தகைய தாக்குதலில் சம்பந்தப்பட்ட “எல்லாவற்றையும்” தனது படைகள் அழித்துவிடும் என நேட்டோ தளபதி மொஸ்கோவிற்கு எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. வார்சாவில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் தனது “வெற்றிக் கோட்பாட்டை” விவரித்த அமெரிக்க விமானப்படை ஜெனரல் அலெக்சஸ் கிரின்கேவிச் Alexus Grynkewich இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், நேட்டோ ஒரு தற்காப்புக் கூட்டணி என்றாலும், அதன் உறுப்பு நாடுகளுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலையும் அது […]













