ஐரோப்பா

HMS டிராகன் போர்க்கப்பலை மத்தியக் கிழக்கிற்கு அனுப்ப தயாராகும் பிரித்தானியா!

  • May 10, 2026
  • 0 Comments

மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்ற சூழ்நிலை தணிந்து அமைதி திரும்பியவுடன் தனது HMS டிராகன் போர்க்கப்பலை மத்திய கிழக்குக்கு அனுப்புவதாக பிரித்தானியா உறுதியளித்துள்ளது. “சூழ்நிலைகள் அனுமதிக்கும்போது, ​​பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இணைந்து வழிநடத்தும் ஒரு பன்னாட்டு கூட்டணியின் ஒரு பகுதியாக, ஜலசந்தியைப் பாதுகாக்க பிரித்தானியா தயாராக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளர். அமெரிக்காவும் ஈரானும் தங்களின் 10 வாரப் போரிலிருந்து படிப்படியாக வெளியேறும் நிலையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், நிலைமை சீரடைந்தவுடன் ஜலசந்தி […]

செய்தி விளையாட்டு

சென்னை, லக்னோ அணிகள் இன்று மோதல்!

  • May 10, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 53 ஆவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே , லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி 10 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10 ஆட்டங்களில் […]

செய்தி விளையாட்டு

புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியது குஜராத்!

  • May 10, 2026
  • 0 Comments

IPL 2026  தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 52-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களைப் பெற்றது. 230 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி , 16.3 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு சகல […]

செய்தி

முதல்வராகிறார் விஜய்: தமிழக அமைச்சரவையும் பதவியேற்பு!

  • May 10, 2026
  • 0 Comments

தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்கவுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்;றியது. எனினும், விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு வழங்கின. அந்தவகையில் தவெக ஆட்சிக்கு 120 சட்;டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிட்டியுள்ளது. அரசியலமைப்பு சட்டப் பிரிவு 164-ன் கீழ் விஜய்யை முதல்வராக நியமனம் செய்து அதற்கான ஆணையை ஆளுநர் அர்லேகர் நேற்று […]

ஐரோப்பா செய்தி

தேர்தல் பின்னடைவைத் தொடர்ந்து ஸ்டார்மருக்கு எச்சரிக்கை விடுத்த தொழிலாளர் கட்சி எம்.பி. வெஸ்ட்

  • May 9, 2026
  • 0 Comments

வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சந்தித்த தோல்விகளைத் தொடர்ந்து, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேத்தரின் வெஸ்ட், பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிரேட்டர் லண்டனில் உள்ள ஹார்ன்சே மற்றும் ஃபிரையர்ன் பார்னெட் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வெஸ்ட், முதன்முதலில் 2015ஆம் ஆண்டு ஹார்ன்சே மற்றும் வுட் கிரீன் தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தற்போது கருவூலக் குழுவில் உறுப்பினராகவும், பாகிஸ்தானுக்கான வர்த்தகத் தூதராகவும் செயல்பட்டு வருகிறார். முன்னாள் தொழிலாளர் கட்சித் தலைவர் […]

செய்தி தமிழ்நாடு

புதிய அரசுக்கு ஸ்டாலின் மீண்டும்  வாழ்த்து

  • May 9, 2026
  • 0 Comments

திமுக தலைவர் ஸ்டாலின் புதிய அரசுக்கு மீண்டும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மாநிலம் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் […]

செய்தி தமிழ்நாடு

தமிழக முதல்வராக விஜய் நாளை பதவியேற்கிறார்

  • May 9, 2026
  • 0 Comments

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக தலைவர் விஜய் இன்று  மாலை சந்தித்ததையடுத்து, ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது உறுதியானது. அத்துடன் நாளை மாலை 3.15 க்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் முதல்வராக பதவியேற்க உள்ளமையும் உறுதியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் […]

இந்தியா

கடல்சார் பாதுகாப்பு திறனில் முக்கிய மாற்றம் – இலக்கை அடைந்த இந்தியா!

  • May 9, 2026
  • 0 Comments

குறுகிய தூரம் செல்லக்கூடிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்தியக் கடற்படையும் அதன் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (DRDO) இணைந்து ஒடிசா கடற்கரைக்கு அப்பால் வங்காள விரிகுடாவில் இந்தச் சோதனையை நடத்தியுள்ளன. குறுகிய தூரம் செல்லக்கூடிய இந்த ஏவுகணை (NASM-SR) ஒரு ஹெலிகாப்டரிலிருந்து வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதாக  இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புத் திறன்களில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, இந்த […]

உலகம் செய்தி

அச்சுறுத்தலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் – ஈரான் அறிவிப்பு

  • May 9, 2026
  • 0 Comments

அமெரிக்கா தனது “அச்சுறுத்தும் அணுகுமுறை” மற்றும் “விரிவாக்கப் போக்கை” மாற்றினால், ராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு தயார் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தெரிவித்துள்ளார். துருக்கி, கட்டார், சவூதி அரேபியா, எகிப்து, ஈராக் மற்றும் அசர்பைஜான் வெளியுறவு அமைச்சர்களுடன் நடந்த தொலைபேசி உரையாடல்களில் அவர் இதை கூறியதாக அவரது அதிகாரப்பூர்வ டெலிகிராம் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், அமெரிக்கா தனது தற்போதைய அணுகுமுறையை மாற்றிக் கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்றும், இல்லையெனில் அச்சுறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டும் […]

ஐரோப்பா

ஹன்டா வைரஸ் பரவலுக்கு மத்தியில் 22 பிரித்தானியர் நாடு திரும்ப ஏற்பாடு!

  • May 9, 2026
  • 0 Comments

ஹன்டா வைரஸ் பரவலுக்கு மத்தியில் எம்.வி. ஹோண்டியஸ் கப்பலில் உள்ள 22 பிரித்தானியர் நாளைய தினம் மீளவும் இங்கிலாந்திற்கு திரும்பவுள்ளனர். கப்பலில் இருந்து இறங்கியவுடன் அவர்கள் முறையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டப்பின் விமானத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் மருத்துவ நிபுணர்கள் பணியில் இருப்பார்கள் என்றும், நோய்வாய்ப்பட்டவர்கள் இருப்பினும் உடனடி சிகிச்சை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு வந்தவுடன், அந்த நபர்கள் 45 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், அதற்கான குறிப்பிட்ட விவரங்கள் […]