புற்றுநோய் மருந்துகளின் விற்பனையில் ஏற்பட்ட வளர்ச்சி – அஸ்ட்ராஜெனெகாவின் பங்குகள் உயர்வு
ஐரோப்பிய சந்தைகளில் அஸ்ட்ராஜெனெகாவின் (AstraZeneca) பங்குவிலைகள் இன்று திடீரென அதிகரித்தன.
புற்றுநோய் மருந்துகளின் விற்பனையில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சி காரணமாக அதன் பங்குகள் உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஜூன் மாத இறுதி வரையிலான மூன்று மாதங்களில் நிகர லாபம் 02 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து $2.51 பில்லியனாக உயர்ந்துள்ளது.
புற்றுநோய் மற்றும் அரிய நோய்களுக்கான மருந்துகளின் வளர்ச்சியால், இந்தக் காலாண்டில் மொத்த வருவாய் நிலையான மாற்று விகிதங்களில் 5 சதவீதம் அதிகரித்து $15.38 பில்லியனாக (€13.49 பில்லியன்) உயர்ந்ததாக அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பிய வர்த்தகத்தின் தொடக்கத்தில் நிறுவனத்தின் பங்குகள் 1.4 சதவீதம் உயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




