உலகம் செய்தி

ஈரான் போரால் ஆட்டம் காணும் கத்தார் பொருளாதாரம்

ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கத்தாரின் பொருளாதாரம், 2027ஆம் ஆண்டிலேயே மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கத்தாரின் பொருளாதாரம், 2027ஆம் ஆண்டிலேயே மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு உலகளாவிய விவகாரங்களுக்கான பேரவையின் ஆய்வாளரும் அரசியல் நிபுணருமான ஷெய்கா அலனூத் பிந்த் ஹமத் அல் தானி, அல் ஜசீராவுக்கு வழங்கிய வழங்கிய நேர்காணலில் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

கட்டாரின் வருமானம் 42 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுமார் 14 சதவீதத்தால் சுருங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், 2027ஆம் ஆண்டின் முற்பகுதியிலேயே கட்டார் மீண்டும் வரவு–செலவுத் திட்ட உபரியைப் பதிவு செய்யும் நிலையை அடையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பல ஐரோப்பிய நாடுகளால் நீண்டகாலம் காத்திருக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி