ஐரோப்பா

பாரிஸில் மூன்று பெண்கள் மீது கத்திகுத்து தாக்குதல்

பாரிஸில் இன்றைய தினம் மூன்று பெண்கள் மீது கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

19, 24 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்கள் இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் ஊடகங்களின்படி, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கர்ப்பிணியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் (Laurent Nunez), இது ஒரு “துணிச்சலான செயல்” என்று தெரிவித்ததுடன், , சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது தொடர்பற்ற ஒரு வாக்குமூலத்தை அளித்ததாக கூறினார்.

ஆனால் அவரது நோக்கங்கள் குறித்து அவசர முடிவுகளுக்கு வர வேண்டாம் என்றும் அறிவித்துள்ளார்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்