ஐரோப்பா

ஜெர்மனி இராணுவத்தில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு

ஜெர்மனி இராணுவத்தில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்ள புதிய நடவடிக்கைகளை எடுப்பதாக பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் Boris Pistorius, தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இராணுவத்தில் பெண்களை சேர்க்க முனைப்பு காட்டி வரும் சூழலில் அங்கு பரவலான பாலியல் துஷ்பிரயோகங்கள்  இடம்பெறுவதாக அறிக்கையொன்று அம்பலப்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

பெர்லினில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது இவ்வாறான குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர், இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் கூறினார்.

இதேவேளை ராணுவத்தின் சொந்த அமைப்பான ‘ராணுவ வரலாறு மற்றும் சமூக அறிவியல் மையம்’ (Centre of Military History and Social Sciences) தயாரித்துள்ள அறிக்கையின்படி, கடந்த 12 மாதங்களில் பெண் வீரர்களில் 40 சதவீதம் பேர் ஏதோ ஒரு வகையில் பாலியல் ரீதியான முறையற்ற நடத்தையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையற்ற நடத்தைகள், வாய்மொழி துன்புறுத்தல் முதல் ஆபாசக் காட்சிகளைப் பார்க்க வற்புறுத்துதல், விருப்பத்திற்கு மாறாகத் தொடுதல், மற்றும் 2 சதவீத நிகழ்வுகளில் பாலியல் வன்முறை வரை பல்வேறு வகைகளில் அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆண் வீரர்களில் சுமார் 19 சதவீதம் பேரும் இத்தகைய முறையற்ற நடத்தைகளுக்கு ஆளாகியுள்ளனர் என்றும், குறிப்பாக பாலின சிறுபான்மையினர் (non-heterosexual soldiers) அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்