பிரித்தானியாவில் நலத்திட்ட உதவி பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இங்கிலாந்தில் நலத்திட்ட உதவிகளை பெறுபவர்களின் வங்கிக் கணக்குகளை வேலை மற்றும் ஓய்வூதியத் துறை அதிகாரிகள், நேரடியாக ஆய்வு செய்யும் முறையை அரசாங்கம் கைவிட்டுள்ளது.
யுனிவர்சல் கிரெடிட் விதிகளின்படி, £16,000-க்கு மேல் சேமிப்பு வைத்திருக்கும் தனிநபர்கள் வேலையின்மை உதவித்தொகையைப் பெறத் தகுதியற்றவர்களாவர்.
இந்நிலையில் இதனை சோதனை செய்ய அதிகாரிகள் வங்கிக் கணக்குளை நேரடியாக சோதனை செய்தனர்.
இருப்பினும் தற்போது இந்த முறையை மாற்றி புதிய முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டமானது யுனிவர்சல் கிரெடிட் வழங்கப்பட்ட பிறகு வங்கிகள் கணக்குகளைச் சரிபார்த்து, அமைச்சர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.
இருப்பினும் இந்த நடவடிக்கையானது அதிக அளவிலான நலத்திட்ட உதவி மோசடிகள் கண்டறியப்படாமல் போவதற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.




