ஐரோப்பா

அணுவாயுதங்களை வைத்திருக்க விரும்பவில்லை – போலந்து திட்டவட்டம்

  • August 27, 2026
  • 0 Comments

போலந்து தனது மண்ணில் அணு ஆயுதங்களை வைத்திருக்க விரும்பவில்லை என்று பாதுகாப்புத் துணை அமைச்சர் பாவெல் சலேவ்ஸ்கி Pawel Zalewski இன்று அறிவித்தார். அணுவாயுதங்கள் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இதைத்தான் நான் மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் கூற விரும்புகிறேன். போலந்து தனது மண்ணில் அணு ஆயுதங்களை வைத்திருக்க விரும்பவில்லை,” எனக் குறிப்பிட்டார். “நாங்கள் நேட்டோவின் அணுசக்தித் தடுப்பு நடவடிக்கைகளில் பங்கேற்க விரும்புகிறோம், ஆனால் அதன் அர்த்தம் எங்கள் மண்ணில் அணு ஆயுதங்களை வைத்திருப்பது அல்ல,” என்று […]

உலகம்

உகாண்டா எபோலா தொற்றற்ற மண்டலமாக அறிவிப்பு

  • August 27, 2026
  • 0 Comments

உகாண்டாவில் கடந்த  42 நாட்களாகப் புதிய எபோலா நோய்த்தொற்று எதுவும் பதிவாகாத நிலையில், அந்நாட்டை எபோலா அற்ற மண்டலமாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு இன்று இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “கடைசியாக உறுதிசெய்யப்பட்ட, வெளிநாட்டிலிருந்து வந்த எபோலா நோயாளி 16 ஜூலை 2026 அன்று குணமடைந்து வீடு திரும்பியதிலிருந்து 42 நாட்களை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அந்த நோயாளியுடன் தொடர்புடைய […]

ஐரோப்பா

இத்தாலியில் சிறிய ரக விமானம் விபத்து – இருவர் பலி

  • August 27, 2026
  • 0 Comments

இத்தாலியில் நேற்று சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியின் வடக்கு பியட்மாண்ட் Piedmont  பகுதியில் உள்ள அன்ட்ரோனா ஷியரன்கோவில் Antrona Schieranco , காம்ப்ளிசியோலி Campliccioli  அணைக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஷ ஆட்டோகைரோ அல்லது கைரோகாப்டர் வகையைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் குறித்த விமானம், கேபிள் காருக்குச் சொந்தமான கேபிள்களில் மோதிய பின்னர் தீப்பிடித்து எறிந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. விபத்தில் 63 வயதுடைய பொறியாளர் மற்றும், அவருடைய 63 வயதுடைய நண்பர் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

‘ஐரோப்பாவில் நடந்த கொடூர இனப்படுகொலை’- போர்க்குற்றவாளி Ratko Mladic ஐ.நா.சிறையில் காலமானார்

  • August 27, 2026
  • 0 Comments

போஸ்னியப் போரின் (1992-1995)போது இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக வாழ்நாள் சிறைத்தண்டனையை எதிர்நோக்கிவந்த போஸ்னிய செர்பிய முன்னாள் படைத்தளபதி ரட்கோ ம்லாடிச் (Ratko Mladic) தனது 84வது வயதில் காலமானார். நெதர்லாந்தின்  Hague நகரிலுள்ள ஐ.நா சிறைச்சாலை வைத்தியசாலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். ஸ்ரெப்ரெனிக்கா இனப்படுகொலை 1995- ஆம் ஆண்டு ஐ.நா-வால் ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என அறிவிக்கப்பட்ட ஸ்ரெப்ரெனிக்காவில் 8,000-க்கும் மேற்பட்ட போஸ்னிய முஸ்லிம்கள் மற்றும் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இவரே பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளார். […]

செய்தி

கியூபெக்கில் விமானத்தின் சக்கரத்தில் சிக்கி நபர் ஒருவர் பலி

  • August 27, 2026
  • 0 Comments

கியூபெக்கில் Quebec உள்ள மாண்ட்ரீல்-ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில், ஏர்பஸ் ஏ350 விமானம் மோதியதில் விமான நிறுத்தப் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 39 வயதான ஆஸ்கார் ரொபாயோ Oscar Robayo என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாரிஸ்-ஓர்லிக்குச் சென்றுகொண்டிருந்த பிரெஞ்சு விமானமான BF5761-ஐ பின்னோக்கி தள்ளும்போது பணியாளர் விமானத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கனடாவின் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியமும், கியூபெக் மரண விசாரணை அதிகாரி அலுவலகமும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளன.    

இலங்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

  • August 27, 2026
  • 0 Comments

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி இடங்களில் வசிக்கும் மக்கள் வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், நீரேற்றத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் சோனல் தினுஷா Sonal Dinusha விளாசிய அபார சதத்தின் உதவியுடன் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. செய்தி விளையாட்டு

சோனல் தினுஷா அபார சதம்: தோல்வியிலிருந்து தப்பியது இலங்கை

  • August 27, 2026
  • 0 Comments

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் சோனல் தினுஷா Sonal Dinusha விளாசிய அபார சதத்தின் உதவியுடன் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி ‘ followed-on’ பெற்ற போதிலும், 2வது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்களின் சவால்களை முறியடித்து 5வது நாள் ஆட்டத்தின் இறுதியில் போட்டியை இலங்கை அணி வெற்றிகரமாக சமநிலையில் முடிவடைந்தது. தனது 5வது டெஸ்ட் போட்டியில் மட்டுமே […]

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தளதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (27) பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி தரப்பு மகா நாயக்க தேரர்கள் உட்பட அனுநாயக தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றார். செய்தி

மகாநாயக்க தேரர்களிடம் ஆசிபெற்றார் ஜனாதிபதி

  • August 27, 2026
  • 0 Comments

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தளதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (27) பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி தரப்பு மகா நாயக்க தேரர்கள் உட்பட அனுநாயக தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றார். முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மல்வத்து தரப்பின் மகா நாயக்க அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றதுடன், […]

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை செய்தி

காணிகோரி யாழ்.தையிட்டியில் இன்றும் போராட்டம்

  • August 27, 2026
  • 0 Comments

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விகாரை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை எவ்வித தாமதமுமின்றி உரிய காணி உரிமையாளர்களிடம் உடனடியாக மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தொடர்ச்சியாக இப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று புதன்கிழமை மாலையில் ஆரம்பித்த இந்தப் […]

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது. இலங்கை செய்தி

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா (photos)

  • August 27, 2026
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது. பிரதம குரு சிவஶ்ரீ பாலேந்திரா ஐயா தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, கடந்த 13ஆம் திகதி அதிகாலை 12.20 மணியளவில் பக்தர்கள் புடைசூழ கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற திருவிழாக்களின் உச்சமாக, இன்று காலை 8.30 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், சந்நிதி வேலவன் காலை 9.40 மணியளவில் […]