கியூபெக்கில் விமானத்தின் சக்கரத்தில் சிக்கி நபர் ஒருவர் பலி
கியூபெக்கில் Quebec உள்ள மாண்ட்ரீல்-ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில், ஏர்பஸ் ஏ350 விமானம் மோதியதில் விமான நிறுத்தப் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 39 வயதான ஆஸ்கார் ரொபாயோ Oscar Robayo என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பாரிஸ்-ஓர்லிக்குச் சென்றுகொண்டிருந்த பிரெஞ்சு விமானமான BF5761-ஐ பின்னோக்கி தள்ளும்போது பணியாளர் விமானத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கனடாவின் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியமும், கியூபெக் மரண விசாரணை அதிகாரி அலுவலகமும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளன.




