உலகம்

உகாண்டா எபோலா தொற்றற்ற மண்டலமாக அறிவிப்பு

உகாண்டாவில் கடந்த  42 நாட்களாகப் புதிய எபோலா நோய்த்தொற்று எதுவும் பதிவாகாத நிலையில், அந்நாட்டை எபோலா அற்ற மண்டலமாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு இன்று இதனை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “கடைசியாக உறுதிசெய்யப்பட்ட, வெளிநாட்டிலிருந்து வந்த எபோலா நோயாளி 16 ஜூலை 2026 அன்று குணமடைந்து வீடு திரும்பியதிலிருந்து 42 நாட்களை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அந்த நோயாளியுடன் தொடர்புடைய வேறு நோய்த்தொற்று பரவியதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. இது நோய்ப் பரவலுக்கு ஒரு முடிவைக் குறிக்கிறது,” என்று தெரிவித்துள்ளது.

“நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தவும், அது மேலும் பரவுவதைத் தடுக்கவும் எடுக்கப்பட்ட வலுவான நடவடிக்கைகளுக்காக” அரசாங்கம், சுகாதாரப் பணியாளர்களை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்