அணுவாயுதங்களை வைத்திருக்க விரும்பவில்லை – போலந்து திட்டவட்டம்
போலந்து தனது மண்ணில் அணு ஆயுதங்களை வைத்திருக்க விரும்பவில்லை என்று பாதுகாப்புத் துணை அமைச்சர் பாவெல் சலேவ்ஸ்கி Pawel Zalewski இன்று அறிவித்தார்.
அணுவாயுதங்கள் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இதைத்தான் நான் மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் கூற விரும்புகிறேன். போலந்து தனது மண்ணில் அணு ஆயுதங்களை வைத்திருக்க விரும்பவில்லை,” எனக் குறிப்பிட்டார்.
“நாங்கள் நேட்டோவின் அணுசக்தித் தடுப்பு நடவடிக்கைகளில் பங்கேற்க விரும்புகிறோம், ஆனால் அதன் அர்த்தம் எங்கள் மண்ணில் அணு ஆயுதங்களை வைத்திருப்பது அல்ல,” என்று தெரிவித்தார்.
அதேநேரம் வொஷிங்டனின் படை நிலை ஆய்வுத் திட்டத்தின் கீழ், நிரந்தர அமெரிக்க இராணுவ இருப்பை அதிகரிப்பதில் போலந்து ஆர்வமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
5,000 அமெரிக்க வீரர்களை நிரந்தர அடிப்படையில் போலந்திற்கு அனுப்புவது குறித்து அதிபர் ட்ரம்ப் பரிசீலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




