காணிகோரி யாழ்.தையிட்டியில் இன்றும் போராட்டம்
யாழ். தையிட்டியில் அமைந்துள்ள விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விகாரை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை எவ்வித தாமதமுமின்றி உரிய காணி உரிமையாளர்களிடம் உடனடியாக மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தொடர்ச்சியாக இப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று புதன்கிழமை மாலையில் ஆரம்பித்த இந்தப் போராட்டம், இன்று வியாழக்கிழமை மாலை வரை இரண்டு நாள்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.
தமக்குரிய சொந்தக் காணிகளை முழுமையாக மீளப் பெறும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.




