உலகம் செய்தி

போர் நெருங்குகிறது: வளைகுடாவில் மீண்டும் பதற்றம்

ஈரான்மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை, வளைகுடா நாடுகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஈரான்மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை, வளைகுடா நாடுகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட அமெரிக்க இராணுவத் தளங்களே, ஈரானின் கடுமையான பதில் தாக்குதல்களுக்கு இலக்காக மாறக்கூடும் என்ற அச்சம் அந்த நாடுகளிடையே எழுந்துள்ளது.

கடந்தகால மோதலின்போது அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள், அமெரிக்காவின் பல தசாப்தகால பாதுகாப்புக் கட்டமைப்பில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்தின.

இந்த விவகாரமே, கடந்த வார இறுதியில் பஹ்ரைனில் நடைபெற்ற வருடாந்த மனாமா பாதுகாப்புப் பேச்சுவார்த்தை மாநாட்டில் அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்களில் முக்கிய இடம்பிடித்திருந்தது.

இதற்கிடையில், ஈரான் மீது குறுகிய கால அறிவிப்பில் தாக்குதல் நடத்துவதற்குத் தேவையான அளவிலான இராணுவப் படைகளையும் தளவாடங்களையும் அமெரிக்கா பிராந்தியத்தில் குவித்துள்ளதாக, பெயர் குறிப்பிட விரும்பாத நான்கு ஐரோப்பிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வாரத்திலேயே இத்தகைய தாக்குதல் இடம்பெறக்கூடும் என்றும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள மற்றுமொரு ஐரோப்பிய அதிகாரி, “போர் வரப்போகிறது. இந்தப் போருக்கு யாரும் ஆதரவாக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி