செய்தி விளையாட்டு

சோனல் தினுஷா அபார சதம்: தோல்வியிலிருந்து தப்பியது இலங்கை

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் சோனல் தினுஷா Sonal Dinusha விளாசிய அபார சதத்தின் உதவியுடன் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் சோனல் தினுஷா Sonal Dinusha விளாசிய அபார சதத்தின் உதவியுடன் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி ‘ followed-on’ பெற்ற போதிலும், 2வது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்களின் சவால்களை முறியடித்து 5வது நாள் ஆட்டத்தின் இறுதியில் போட்டியை இலங்கை அணி வெற்றிகரமாக சமநிலையில் முடிவடைந்தது.

தனது 5வது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடும் சோனல் தினுஷா, தொடர்ச்சியாக இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசி அசத்தினார்.

முதல் இன்னிங்ஸில் 103 ரன்கள் எடுத்த அவர், 2வது இன்னிங்ஸில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 133 ரன்கள் குவித்தார்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஸ்வீப் (Sweep) ஷாட்களை மிகச் சரியாகப் பயன்படுத்தி ரன்களைச் சேர்த்தார். இத்தொடரில் மொத்தம் 419 ரன்கள் குவித்த தினுஷா, 139.66 என்ற சராசரியைப் பதிவு செய்து இத்தொடரின் மிகச்சிறந்த வீரராகத் திகழ்ந்தார்.

இலங்கை அணியின் கீழ்வரிசை ஆட்டக்காரர்களான கேஷர நுவனித்த (112 ரன்கள் கூட்டணி), பிரபாத் ஜெயசூர்யா மற்றும் லஹிரு குமார ஆகியோர் தினுஷாவிற்கு பக்கபலமாக நின்று விக்கெட்டுகளைக் காத்து இந்திய பந்துவீச்சாளர்களின் பொறுமையைச் சோதித்தனர்.

போட்டிச் சுருக்கம்

இந்தியா (முதல் இன்னிங்ஸ்) 503/9

இலங்கை (முதல் இன்னிங்ஸ்): 290

இலங்கை (2வது இன்னிங்ஸ் – followed-on) 429/9 டிக்ளேர்

முடிவு: போட்டி சமநிலையானது.

முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி