இத்தாலியில் சிறிய ரக விமானம் விபத்து – இருவர் பலி
இத்தாலியில் நேற்று சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியின் வடக்கு பியட்மாண்ட் Piedmont பகுதியில் உள்ள அன்ட்ரோனா ஷியரன்கோவில் Antrona Schieranco , காம்ப்ளிசியோலி Campliccioli அணைக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஷ
ஆட்டோகைரோ அல்லது கைரோகாப்டர் வகையைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் குறித்த விமானம், கேபிள் காருக்குச் சொந்தமான கேபிள்களில் மோதிய பின்னர் தீப்பிடித்து எறிந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
விபத்தில் 63 வயதுடைய பொறியாளர் மற்றும், அவருடைய 63 வயதுடைய நண்பர் ஆகிய இருவரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணியாளர்கள், சட்ட அமலாக்கத் துறையினர் மற்றும் கார்டியா டி ஃபினான்சாவின் ஆல்பைன் மீட்பு சேவை உள்ளிட்ட அவசரகாலக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
விபத்து தொடர்பான சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




