ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க 26 அமெரிக்கா பறக்கிறார் விஜித ஹேரத் இலங்கை செய்தி

ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க 26 அமெரிக்கா பறக்கிறார் விஜித ஹேரத்

  • September 8, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக இலங்கை சார்பில் அமைச்சர் மட்டத்திலான பிரதிநிதித்துவம் இடம்பெறும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (08) தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் தாம் கலந்துகொண்டு, செப்டம்பர் 28 ஆம் திகதி உரையாற்றவுள்ளதாகக் கூறினார். இந்த வருடாந்த ஐ.நா. மாநாட்டில் […]

உலகம்

சிங்கப்பூரில் முதலமைச்சர்களுக்கு அதிகூடிய சம்பளம் – உலக நாடுகளில் முதல் இடம்

  • September 8, 2026
  • 0 Comments

சிங்கப்பூர் வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் திகதியில் இருந்து  முதல் அமைச்சர்களின் சம்பளத்தை உயர்த்தவுள்ளது. இதற்கமைய தற்போதைய பிரதமர் லாரன்ஸ் வோங்கின் Lawrence Wong சம்பளம் 64 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி அவரின் ஆண்டு வருமானம் 3.6 மில்லியன் டொலராக உயர்த்தப்பட்டுள்ளது. (2.1 மில்லியன் பவுண்ட்ஸ்) இந்த உயர்வானது இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள தலைவர்களின் சம்பளத்தை விடவும் அதிகமாகும். இதற்கமைய உலகின் அதிக சம்பளம் பெறும் அரசியல் தலைவர்களின் தாயகமாக சிங்கப்பூர் காணப்படுகிறது. அதேநேரம் இளநிலை […]

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கை செய்தி

யாழ். ஆயரை சந்தித்தார் சிறிதரன் எம்.பி: தமிழர் பிரச்சினை குறித்து ஆராய்வு

  • September 8, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீதியை நிலைநாட்டுதல் மற்றும் அதற்கான சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீட்டைப் பெறுதல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. மேலும், மனித உரிமைகளுக்குப் புறம்பான பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதனால் தமிழ் இளைஞர்களும் மக்களும் எதிர்கொள்ளும் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

நேட்டோவிற்கு எதிராக ரஷ்யா இரகசிய பயிற்சி – கோட்லாண்டை கைப்பற்றவும் முயற்சி

  • September 8, 2026
  • 0 Comments

ஸ்வீடனின் கோட்லாண்ட்  Gotland,தீவைக் கைப்பற்றுவதையும், நேட்டோவிற்கு எதிராகவும் உருவகப்படுத்தப்படும் போர் பயிற்சிகளில்  ரஷ்யா  ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டோசியர் நிலையம் Dossier  Centre இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சமீபத்திய பத்தாண்டுகளில், மென்பொருள் மூலம் மாதிரியாக்கப்பட்ட இந்த உருவகப்படுத்துதல்களில் 1,000 பங்கேற்பாளர்கள் வரை பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் ஜப்பானுடனான கற்பனையான போர்ச் சூழல்களும் இந்த போர் பயிற்சியில் உள்ளடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட பயிற்சிகளிலேயே உக்ரைன் முக்கிய இலக்காக மாறியதாகவும் டோசியர் சுட்டிக்காட்டியுள்ளது. […]

ஐரோப்பா

பிரான்ஸில் அருங்காட்சியகம் ஒன்றில் இருந்து 04 ஓவியங்கள் திருட்டு

  • September 8, 2026
  • 0 Comments

பிரான்ஸின் ரிவியேராவில்  கேன்ஸ்-சுர்-மெர் Cagnes-sur-Mer நகரில் உள்ள ரெனோயர்  Renoir அருங்காட்சியகத்தில் இருந்து, நான்கு ஓவியங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதுடன், அவர்களை கைது செய்ய துரத்திச் சென்றுள்ளனர். இதன்போது கொள்ளையர்கள் வசம் இருந்த ஒரு ஓவியம் கீழே விழுந்ததாகவும், ஏனைய மூன்று ஓவியங்களுடன் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொள்ளையர்களை கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

உலகம்

சவுதி அரேபியா மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – 73 பேர் காயம்

  • September 8, 2026
  • 0 Comments

சவுதி அரேபியாவின் பல நகரங்களில் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள்  தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில்   73 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கைக்கு பதிலளித்துள்ள  ஹூதி  கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் உட்பகுதியில் ஒரு இராணுவ நடவடிக்கை வரவுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஏமன் கிளர்ச்சிக் குழுவானது, ஜூலை மாதம் கடற்படை முற்றுகையை அறிவித்ததிலிருந்து, செங்கடலில் உள்ள கப்பல்கள் மீதான தாக்குதல்கள் உட்பட, சவுதி அரேபியாவைத் தொடர்ந்து […]

ஐரோப்பா

இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து வரும் பொருட்களுக்கு தடை விதிக்க பிரான்ஸ் தீர்மானம்

  • September 8, 2026
  • 0 Comments

இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து வரும் பொருட்களுக்கு தடை விதிக்க பிரான்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக பிரித்தானியா தடை விதித்ததை தொடர்ந்து தற்போது பிரான்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் Jean-Noël Barrot இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மேற்கு கரையில் கட்டுப்பாடற்ற விரிவாக்கம், தீவிரவாதக் குடியேற்றவாசிகளால் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோயல் பாரோட் தெரிவித்தார். இதேவேளை பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடாவுடன் சேர்ந்து மொத்தமாக […]

கருத்து & பகுப்பாய்வு

சிகரெட் புகை காரணமாக 270 கோடி மக்களுக்கு பாதிப்பு

  • September 8, 2026
  • 0 Comments

உலகளவில் புகைப்பிடிக்காத குழந்தைகள் உள்ளிட்ட 270 கோடிக்கும் அதிகமான மக்கள் மறைமுகமாக புகையை சுவாசித்ததன் காரணமாக நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது. இதன்காரணமாக 2023 ஆம் ஆண்டு 17 இலட்சம் மரணங்கள் ஏற்பட்டதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தி லான்செட்’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், புகையிலை உலகளவில் நோய்களுக்கான ஒரு முக்கிய காரணமாகத் தொடர்கிறது என்றும், புகைப்பிடித்தல் தொடர்பான நோய்களால் இறந்ததாக மதிப்பிடப்பட்ட 80 இலட்சம் மக்களில் புகைப்பிடிக்காத பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2023 ஆம் […]

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இலங்கை செய்தி

இலங்கையில் களமிறங்கினார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்: நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு

  • September 8, 2026
  • 0 Comments

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். சிறப்பு விமானத்தில் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். எதிர்வரும் 10 திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியப் பாதுகாப்பு […]

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு வர்த்தகத் தடை விதிக்கப்படும் என பிரித்தானியா செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

மேற்குக்கரை இஸ்ரேலிய பொருட்களுக்கு பிரித்தானியா தடை விதிப்பு

  • September 8, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு வர்த்தகத் தடை விதிக்கப்படும் என பிரித்தானியா செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இரு – நாட்டுத் தீர்வுக்குப் பிரித்தானியா வழங்கும் ஆதரவை மேலும் வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. பிரித்தானியாவின் இந்தத் தலையீட்டை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. அதேவேளை, இஸ்ரேலின் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich), பிரித்தானியா தூதரை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என […]