இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து வரும் பொருட்களுக்கு தடை விதிக்க பிரான்ஸ் தீர்மானம்
இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து வரும் பொருட்களுக்கு தடை விதிக்க பிரான்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக பிரித்தானியா தடை விதித்ததை தொடர்ந்து தற்போது பிரான்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் Jean-Noël Barrot இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மேற்கு கரையில் கட்டுப்பாடற்ற விரிவாக்கம், தீவிரவாதக் குடியேற்றவாசிகளால் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருவதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோயல் பாரோட் தெரிவித்தார்.
இதேவேளை பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடாவுடன் சேர்ந்து மொத்தமாக 11 நாடுகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.




