உலகம்

தைவான் ஜலசந்தியில் ஏற்படும் மோதல் – 02ஆம் உலகப் போரை விட பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்

  • September 9, 2026
  • 0 Comments

தைவான் நீரிணைப் பகுதியில் ஏற்படும் எந்தவொரு மோதலும் இரண்டாம் உலகப் போரை விட உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று  அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தாய்பே நகரில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பேசிய, தைவானில் உள்ள அமெரிக்க நிறுவனத்தின் (American Institute in Taiwan) இயக்குனர் ரேமண்ட் கிரீன், இன்று இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். வரவிருக்கும் அமெரிக்க-சீன உச்சிமாநாடு  தகவறான கணிப்புகளை தவிர்க்க உதவும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தைவான் […]

உலகம்

கொரிய எல்லையில் பதற்றம் – தென்கொரியாவை ஊடுருவும் வடகொரியா

  • September 9, 2026
  • 0 Comments

வட மற்றம் தென்கொரியாவை  பிரிக்கும் இராணுவ எல்லைக் கோட்டைத் தாண்டி வட கொரியப் படைகள் ஊடுருவுவது உள்ளிட்ட செயற்பாடுகளை கண்காணித்து வருவதாக  தென்கொரிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பதிலடி கொடுக்க தேவையான  , உறுதியான இராணுவத் தயார்நிலையில்  இருப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் வட கொரியப் படைகள் இராணுவ எல்லைக் கோட்டை 20 முறைகளுக்கும் மேலாக கடந்து சென்றுள்ளதாக ‘சோசுன் இல்போ’ (Chosun Ilbo) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்திக்கு இராணுவம் இன்று பதிலளித்துள்ள […]

சமூக ஊடகங்களின் அல்காரிதம்களைக் (algorithms) கட்டுப்படுத்துவதற்கான கன்பராவின் திட்டங்களை டிரம்ப் விமர்சித்துள்ள நிலையில், அமெரிக்காவுடனான தங்களது உறவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

சமூக ஊடகத் திட்டம்: ஆஸ்திரேலியாவின் நகர்வுக்கு அமெரிக்கா போர்க்கொடி

  • September 9, 2026
  • 0 Comments

சமூக ஊடகங்களின் அல்காரிதம்களைக் (algorithms) கட்டுப்படுத்துவதற்கான கன்பராவின் திட்டங்களை டிரம்ப் விமர்சித்துள்ள நிலையில், அமெரிக்காவுடனான தங்களது உறவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. சமூக ஊடகப் பயனாளர்கள் அல்காரிதம் பரிந்துரைகளில் இருந்து விலகிக் கொள்ளும் (opt out) வாய்ப்பை வழங்கும் வரைவுச் சட்டத்தை ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதன் மூலம் பயனாளர்கள் தங்களது சமூக ஊடகப் பக்கங்களைச் சுயமாக நிர்வகித்துக் கொள்ள முடியும். இந்தச் சட்டத்திற்குப் பணியாத சமூக ஊடக நிறுவனங்களுக்கு […]

ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அதேவேளை அமெரிக்கப் படைகள் ஈரானிய கச்சா எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, ஈரான் ஜோர்தானில் உள்ள அமெரிக்கத் தளத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதை அடுத்து மத்திய கிழக்குப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தீவிரமடையும் மத்திய கிழக்கு போர்: சவூதிமீதும் தாக்குதல்

  • September 9, 2026
  • 0 Comments

ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அதேவேளை அமெரிக்கப் படைகள் ஈரானிய கச்சா எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, ஈரான் ஜோர்தானில் உள்ள அமெரிக்கத் தளத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதை அடுத்து மத்திய கிழக்குப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் இப்போரின் முக்கிய விரிவாக்கமாக, சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் உள்ள நான்கு நகரங்கள் மீது ஹூதிகள் நடத்திய தாக்குதலில் […]

பாலியல் வன்முறை மற்றும் குடும்பச் சட்ட நீதி அமைப்புகளில் ஆஸ்திரேலியர்கள் இன்னமும் “ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான பாதிப்புகளை” எதிர்கொண்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்முறை உச்சம்:வெளியான அதிர்ச்சி தகவல்

  • September 9, 2026
  • 0 Comments

பாலியல் வன்முறை மற்றும் குடும்பச் சட்ட நீதி அமைப்புகளில் ஆஸ்திரேலியர்கள் இன்னமும் “ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான பாதிப்புகளை” எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டின் குடும்ப மற்றும் பாலியல் வன்முறைத் தடுப்பு ஆணையர் மைக்கேலா க்ரோனின் (Micaela Cronin) தனது மூன்றாவது ஆண்டறிக்கையைப் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அரசாங்கங்களும் சமூகங்களும் எடுத்து வரும் நடவடிக்கைகள் தேவையான வேகத்திலோ அல்லது அளவிலோ இன்னும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் தரவுகள் பதிவு செய்யப்படத் தொடங்கிய […]

பொறுப்புகூறல் விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தேசிய பொறிமுறையைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இலங்கை செய்தி

உள்ளக பொறிமுறையே இலங்கையின் இலக்கு: வெளிவிவகார அமைச்சர் திட்டவட்டம்

  • September 9, 2026
  • 0 Comments

பொறுப்புகூறல் விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தேசிய பொறிமுறையைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்: “தேசிய பொறிமுறை தற்பொழுது முறைப்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு வருகிறது. அத்துடன், காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதுடன், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எமது […]

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது" என்று அமைச்சரவை பதில் பேச்சாளரும், வெளிவிவகார அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். இலங்கை செய்தி

இலங்கை, இந்தியாவுக்கிடையில் 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

  • September 9, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது” என்று அமைச்சரவை பதில் பேச்சாளரும், வெளிவிவகார அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (செப்டம்பர் 09) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த […]

உலகம்

  ஜெருசலேமில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை மூட இஸ்ரேல் தீர்மானம்

  • September 8, 2026
  • 0 Comments

ஜெருசலேமில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேல் தீர்மானித்துள்ளது. கூடுதலாக, “இஸ்ரேலுக்கு எதிரான மற்றும் யூத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள  12 பிரித்தானிய பிரதிநிதிகளும் இஸ்ரேலுக்குள் நுழையத் தடை விதிக்கப்படவுள்ளனர். மேலும் காசா மற்றும் இஸ்ரேலில் உள்ள கிரியாட் காட்டில் அமைந்துள்ள “சர்வதேச உதவி மையத்திலிருந்து பிரித்தானிய பிரதிநிதிகளை வெளியேற்றவும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேலின் மேற்கு கரையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதிப்பதாக பிரித்தானியா அறிவித்ததை தொடர்ந்து இஸ்ரேல் இந்த பதில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஐரோப்பா

மன்னரின் ஆணை தொடர்பில் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினருக்கு அறிவிக்கப்பட்டதா?

  • September 8, 2026
  • 0 Comments

இங்கிலாந்துக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, சசெக்ஸ் கோமகனும் கோமகியும் தனிப்பட்ட, அரச குடும்பப் பணிகளில் ஈடுபடாத உறுப்பினர்களாகவே தொடர்வார்கள் என்பதை வலியுறத்தி மன்னர் சார்லஸ் ஆணையொன்றை எழுதியுள்ளார். அரச உதவியாளர் லார்ட் பென்யனால் அரசாங்கத் துறைகள் மற்றும் இராணுவத்திற்கு அனுப்பப்பட்ட இந்த வழிகாட்டுதல், ஹாரி மற்றும் மேகனுக்கு எந்தவொரு அதிகாரப்பூர்வமான அரசு அல்லது அரச கடமைகளும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்தக் கடிதம் பொதுவெளியில் வெளியிடப்படுவதற்கு முன்பு தம்பதியினருக்குத் தெரிவிக்கப்பட்டது என்று அரச குடும்ப வட்டாரங்கள் கூறியபோதிலும், அது […]

ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க 26 அமெரிக்கா பறக்கிறார் விஜித ஹேரத் இலங்கை செய்தி

ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க 26 அமெரிக்கா பறக்கிறார் விஜித ஹேரத்

  • September 8, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக இலங்கை சார்பில் அமைச்சர் மட்டத்திலான பிரதிநிதித்துவம் இடம்பெறும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (08) தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் தாம் கலந்துகொண்டு, செப்டம்பர் 28 ஆம் திகதி உரையாற்றவுள்ளதாகக் கூறினார். இந்த வருடாந்த ஐ.நா. மாநாட்டில் […]