ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க 26 அமெரிக்கா பறக்கிறார் விஜித ஹேரத்
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக இலங்கை சார்பில் அமைச்சர் மட்டத்திலான பிரதிநிதித்துவம் இடம்பெறும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (08) தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் தாம் கலந்துகொண்டு, செப்டம்பர் 28 ஆம் திகதி உரையாற்றவுள்ளதாகக் கூறினார்.
இந்த வருடாந்த ஐ.நா. மாநாட்டில் பங்கேற்பதற்காக செப்டம்பர் 26 ஆம் திகதி தாம் நியூயோர்க் புறப்படத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.




