உலகம்

சிங்கப்பூரில் முதலமைச்சர்களுக்கு அதிகூடிய சம்பளம் – உலக நாடுகளில் முதல் இடம்

சிங்கப்பூர் வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் திகதியில் இருந்து  முதல் அமைச்சர்களின் சம்பளத்தை உயர்த்தவுள்ளது.

இதற்கமைய தற்போதைய பிரதமர் லாரன்ஸ் வோங்கின் Lawrence Wong சம்பளம் 64 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி அவரின் ஆண்டு வருமானம் 3.6 மில்லியன் டொலராக உயர்த்தப்பட்டுள்ளது. (2.1 மில்லியன் பவுண்ட்ஸ்)

இந்த உயர்வானது இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள தலைவர்களின் சம்பளத்தை விடவும் அதிகமாகும்.

இதற்கமைய உலகின் அதிக சம்பளம் பெறும் அரசியல் தலைவர்களின் தாயகமாக சிங்கப்பூர் காணப்படுகிறது.

அதேநேரம் இளநிலை அமைச்சர்களுக்கு ஆரம்பத்தில் 9 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்கப்படும். அவர்களின் செயல்திறனைப் பொறுத்து, ஆண்டு வருமானம் S$1.8 மில்லியன் வரை எட்டக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் வோங், இந்த சம்பள உயர்வுகள் குறித்த பொதுமக்களின் உணர்வுகளைப் பிரதமர் வோங் ஏற்றுக்கொண்டதோடு, தனது சம்பள உயர்வை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்போவதாகவும் அறிவித்தார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்